19 வயதுக்குட்பட்டோருக்கான அணிக்கு கடந்த வருடம் தேர்வு செய்யப்பட்ட அர்ஜுன் டெண்டுல்கர் செகண்ட் லெவன் சாம்பியன்ஷிப் போட்டியில் தனது தடத்தை பதித்துள்ளார். சர்ரே பேட்ஸ்மேன் நாதன் டெய்லியை வீழ்த்தி தனது அபார பந்துவீச்சை பதிவு செய்தார். எம்சிசி யங் கிரிக்கெட்டர்களில் அர்ஜுன் டெண்டுல்கர் தனது தந்தையின் புகழை தக்க வைக்கும் விதமாக சிறப்பாக ஆடி வருகிரார். 4 ரன்கள் எடுத்திருந்த டெய்லியை போல்டாக்கி வெளியேறினார் அர்ஜுன் டெண்டுலகர்.
இந்த விக்கெட்டை லார்ட்ஸ் கிரிக்கெட் மைதனத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் பதிவு செய்துள்ளது.
அர்ஜுன் டெண்டுலகர், இந்தப் போட்டியில் 50 ரன்களை விட்டுகொடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். 11 ஓவர்கள் வீசிய அவர் 2 மெய்டன் ஓவர்களையும் வீசினார்.
எனினும் இந்த 11 ஓவர்களில் 4 நோபால்களை வீசினார் அர்ஜுன் டெண்டுல்கர்.