இன்று சென்னைக்கு வந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் மாணவிகளிடம் கலந்துரையாடினார். அக்கலந்துரையாடலில் மாணவிகளை தன்னை சார் என்று அழைக்க வேண்டாம், ராகுல் சகோதரன் என்று அழைக்குமாறும் கூறினார். மேலும் ஜி.எஸ்.டி முறையில் மாற்றம் கொண்டுவரப்படும் எனவும் கூறியுள்ளார். தனது தாய் சோனியாவிடமிருந்து பணிவை கற்றுக்கொண்டதாகவும், பெண்களை நாம் சமமாக கருத வேண்டும் எனவும், பெண்களை மரியாதையாக நடத்துவதில் வட இந்தியாவை விட தென் இந்தியா சிறந்து விளங்குவதாகவும் கலந்துரையாற்றினார். மேலும் நம் நாடு பல கலாச்சாரங்களை கொண்டது. இந்தியாவின் பன்முக தன்மையை நாம் மதிக்க வேண்டும். ஆனால் நாடு முழுக்க ஒரே கலாச்சாரத்தை கொண்டுவர பாஜக முயல்கிறது என்று பாஜகவை குற்றம் சாட்டியுள்ளார்.
சகோதரன் என்று என்னை அழையுங்கள்
