இந்திய விமான படை குண்டு வீச்சில் ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் முகாம் தகர்க்கப்பட்டு உள்ளது. அதிகாலை 3.30 மணிக்கு இந்த தாக்குதலை இந்திய விமான படை நடத்தி உள்ளது.12 மிராஜ் 2000 ரக போர் விமானங்கள் இந்த தாக்குதலை நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.1000 கிலோ அளவில் ஆன குண்டுகள் வீசப்பட்டு உள்ளன. இ்து குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் “நமது நாட்டின் அமைதியும், சகிப்பு தன்மையும் பலவீனம் என அர்த்தம் ஆகாது ஜெய்ஹிந்த் ” என பதிவிட்டு இந்திய விமான படைக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
சகிப்புதன்மை பலவீனம் அல்ல _ சச்சின்
