கோடைக்காலத்தில் உட்கொள்ள வேண்டிய உணவு வகைகள்

கோடைக்காலம் வர இருப்பதால் சென்னையில் வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. இவ்வாறு வெயிலின் காரணமாக பல்வேறு உடல்நிலை பாதிப்புகள் ஏற்படுகிறது. அவற்றுள் மஞ்சள்காமாலை, அம்மைப் போடுதல் போன்றவை குறிப்பிடத்தக்கவை. அவற்றிலிருந்து உடலை பதுகாப்பாகவும், ஆரோக்கியத்துடனும் வைத்துக்கொள்ள ஒரு சில காய்கறிகள் மற்றும் பழங்களை உட்கொள்வது நல்லது.

பொதுவாக கோடைகாலத்தில் இரவுபொழுது குறைவாகவும், பகல் பொழுது அதிகமாகவும் இருக்கும். அதேபோல், கோடைக்காலத்தை வரவேற்கும் விதமாக, குளிர் காலத்தின் கடைசியில் தோன்றுவதுதான், வசந்த காலம். இதிலும் இரவுபொழுது குறைவாகவும், பகல் பொழுது அதிகமாகவும்இருக்கும். ஒவ்வொரு சீசனிலும் ஒவ்வொரு வகையான காய்கறிகள் மற்றும் பழங்கள் கிடைக்கின்றன. ஆரஞ்ச் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் அதிகமாக கிடைக்கிறது.

அனைத்து பழங்கள் மற்றும் காய்கறிகளும் பொதுவாக எல்லா சீசனிலும் கிடைக்கும். ஆனால் ஒரு சில சீசனில் மட்டுமே மலிவு விலையில் கிடைக்கிறது. எனவே சீசனுக்கு ஏற்றவாறு அவற்றை வாங்கி உண்ணலாம்.

கேரட்

 • ஆண்டு முழுவதும் இந்த காய்கறி கிடைக்கும். ஆனால் வசந்த மற்றும் கோடைக்காலத்தில் அதிக அளவில் கிடைக்கிறது. கேரட் கண்களுக்கு மிகவும் நல்லது. மேலும் உடலின் வெப்பத்தை குறைத்து குளிர்ச்சி அளிக்க கூடியது.

முள்ளங்கி

 • முள்ளங்கியை அதிகமாக வாங்கி சாப்பிடலாம். இது உடலை ஆரோக்கியத்துடன் வைக்க உதவும். மேலும் இதில் ஆண்டி ஆக்ஸிடங்கள் அதிகமாக உள்ளன.

வெங்காயம்

 • வெங்காயத்தை அதிக அளவில் உணவில் சேர்த்துக் கொள்வது சிறந்தது. பொதுவாக வெங்காயம் எல்லாவிதமான சீசனிலும் கிடைக்கிறது. அதிலும் வெள்ளை வெங்காயம் கோடையில் அதிகம் கிடைக்கும். இவற்றில் சல்பர் அதிகம் உள்ளது. மேலும் இது சுவாசப்பிரச்சனைகள் மற்றும் ஆஸ்துமாவிற்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது.

தக்காளி

 • தக்காளியில் விட்டனின் சி மற்றும் ஆண்டி-ஆக்ஸிஜன் உள்ளது. அனைத்து உணவிலும் எடுத்துக் கொள்ளப்படுகிறது.

உருளைக்கிழங்கு

 • உருளைக்கிழங்கு மிகவும் சுவையான காய்கறிகளுள் ஒன்றாகும். இது கோடைக்காலத்தில் அதிகமாகவும் விலை மலிவுடனும் கிடைக்கிறது.

பீன்ஸ்

 • இந்த காய்கறியானது இதயத்திற்கு மிகவும் நல்லது. மேலும் இது உடல் எடையை குறைப்பதற்கு சிறந்த டயட்டிஸ்ட் வெஜிடெபுல் ஆக பயன்படுகிறது.

பூண்டு

 • பூண்டு அனைத்து உணவிலும் சேர்த்துக் கொள்ளக்கூடிய ஒன்றாகும். பொதுவாக வாசனைக்காகவே அதிகம் உணவில் சேர்க்கப்படுகிறது. இது இதயத்திற்கு மிகவும் நல்லது. பூண்டு இரைப்பை மற்றும் குடல் நோய்கள் வருவதை தடுக்கிறது. சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியாக பயன்படுகிறது.

எலுமிச்சை

 • எலுமிச்சை கோடைக்காலத்தில் அதிகமாக கிடைக்கிறது.

நெல்லிக்காய்

 • இது உடல் முழுவதும் சிறந்த ஆரோக்கியத்தைத் தரக்கூடியது. நெல்லிக்காயில் விட்டமின் சி மற்றும் கனிம, நார்ச்சத்துக்கள் உள்ளன.

 வெள்ளரிக்காய்

 • வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. இது கோடைக்காலத்தில் மிக அதிகமாகவே கிடைக்கிறது. உடலுக்கு நீர்ச்சத்து கிடைப்பதோடு உணவு செரிமான பிரச்சனைகளுக்கு சிறந்த மருந்தாகும்.

தர்பூசணி

 • தர்பூசணி சிறந்த நீர்ச்சத்து உள்ள ஒன்றாகும். கோடைக் காலத்தில் அதிகமாக கிடைக்கிறது. இது வெயிலில் இருந்து தோலின் செல்களைப் பாதுகாக்கிறது.

கொய்யாப்பழம்

 • கொய்யா உடல் சூட்டை தணித்து செரிமானப் பிரச்சனையிலிருந்து விடுபட பயன்படுகிறது.

திராட்சை

 • திராட்சையில் பலவிதமான சத்துக்கள் உள்ளன. அவற்றுள் விட்டமின் டி மற்றும் ஆண்டி-ஆக்சிடன்ட்டுகள் குறிப்பிடத்தக்கவை ஆகும்.திராட்சை அதிகமாக எடுத்துக்கொள்வதால் உடலுக்கு அதிக ஆற்றலும், நோய் எதிர்ப்புத் திறனும் கிடைக்கிறது.
 • திராட்சை உண்பதால் முகம், முடி சருமத்திற்கான பலன்கள் கிடைக்கிறது. மேலும் திராட்சையில் உள்ள “லிவோலியிக்” என்ற அமிலம் முடி உதிர்வை தடுத்து முடியை வளரச் செய்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *