கடந்த சில வருடங்களாக நம்மளை ஆட்டிபடுத்தி வரும் உயிர் கொல்லி நோயான கொரானாவுக்கு இன்னும் முடிவு கட்ட முடியவில்லை. உண்மையில் இது இயற்கையான ஒன்று நாம் தவிர்க்க இயலாதது. என்றால் அறிவியல் பொய் என்று அல்லவா ஆகிவிடும். மாற்றங்கள் மட்டுமே நிலையானது என்பது உண்மை. ஒவ்வொரு மாற்றத்துக்கு பிறகும் ஒரு தீர்வு கிடைக்கும். ஆனால் இந்த கொரானாவுக்கு கிடைக்காதா என்றால் இல்லை, ஏன் தீர்வு கிடைக்கவில்லை என்பது ஆட்சியாளருக்கு மட்டுமே வெளிச்சம்.

ஆரம்பத்தில் இருந்தே கவனக்குறைவு, தொலைதூரப் பார்வை,அலட்சியம் ஆகியவற்றால் கடும் துயரத்துக்கு உள்ளானோம். ஆனால் தற்பொழுதும் அதே துன்பநிலை தான். இதற்கெல்லாம் தனிமனிதனை குறை சொல்லலாமா அல்லது அரசாங்கத்தை குறை சொல்லலாமா என்றால் நமது நிர்வாக குறைபாடு தான் காரணம். நினைத்தால் நெஞ்சு வலிக்கிறது. ஏன் இந்த அலட்சியம், பொது போக்குவரத்து கழகம் பஸ்சில் இரும்பு தூணோடு இணைத்து வைத்திருந்த சானிடைசர் அவ்வளவு சீக்கிரம் எடுக்க சொன்னது யார். அது எங்கே சென்றது என்றால் வெட்கக்கேடு…

தேர்தல் நேரத்தில கொரோனா இல்லையா? தேர்தல் முடிந்தவுடன் எங்கிருந்து வந்தது இந்த கொரோனா. முயற்ச்சி செய்திருந்தால் இன்று கொரோனா இல்லாமல் போயிருக்கும். முயற்ச்சி செய்வது போல் நடிப்பவர்களால் கொரோனாவை எதுவும் செய்ய இயலாது என்பது வெட்ட வெளிச்சமாகிறது. குறைந்தபட்சம் குறுகிய கால விதிமுறை கடைபிடித்து இருந்தாலே நாம் நிம்மதியாக இருந்திருப்போம். எதுவும் செய்யாமல் இருந்ததால் நாம் அனுபவிக்கும் துன்பம் சொல்லிமாள இயலாது.
விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்தவர்களுக்கு எவ்வாறு வந்தது கொரோனா. குறிப்பாக சச்சின் டெண்டுல்கர் அவர் செய்யாத கொரோனா பிரச்சாரங்கள் இல்லை. ஆனால், கை கழுவுவார், கிரிக்கெட் லீக் மேட்ச்;கலந்துகொள்வார், கொரோனா வரும். இதிலிருந்து நாம் உணர்வது என்ன? வாய் மட்டும் வேலை செய்தால் கொரோனாவை வெல்ல முடியாது. உண்மையான சுயகட்டுப்பாடுகள் மட்டுமே கொரோனாவை ஒழிக்க முடியும் என்பதே நிதர்சனமான உண்மையாகும்.

தடுப்பூசி போட செய்கிறது அரசாங்கம் தவறில்லை. ஆனால் ஒரு சில மருந்து நிறுவனத்தின் மருந்துகளை மட்டும் உயர்வாக பேசுவது ஏன்? சமூக வலைய தளத்தில் இவ்வாறு செய்பவர் யார்? உயிர்க்காக்கும் மருத்துவ தொழிலில் இருப்பவர்களுக்கு விளம்பரம் தேவையா? அதன் மூலம் கிடைக்கும் வருமானம் எங்கே போகிறது என்பது இன்றைய குடிமகனுக்கு புரியவில்லை. எல்லாம் அரசியல் என்றால் மனிதநேயம் எங்கே? எப்படி புரியவைப்பது என்று தெரியவில்லை.
முதலில் வந்த தடுப்பூசி மருந்துகளை வீணடிக்க வேண்டிய காரணம் என்ன? மாநில அரசுகளே நேரடி கொள்முதல் செய்யவேண்டி இருந்தால் என்ன? நாம் இறக்குமதி செய்யும்போது தரம் பரிசோதித்து வெளிநாட்டு கொரோனா தடுப்பூசிகளை நமக்கு இறக்குமதி செய்தால் என்ன? எல்லாம் அரசியல் இதை வைத்து கொரோனாவை வெல்ல முடியாது. அவர்களால் வெறும் தலைப்புச்செய்திகளில் மட்டுமே வர இயலும் என்பதே நிதர்சன உண்மை.