இயக்குநர் பாலா இயக்கியுள்ள ‘வர்மா’ திரைப்படத்தை கைவிடுவதாக தயாரிப்பு நிறுவனம் இ-4 என்டெர்டெய்மென்ட் அறிவித்து உள்ளது. தெலுங்கில் விஜய் தேவர்கோட நடித்து மெகா ஹிட் ஆன அர்ஜுன் ரெட்டி திரைபடத்தின் தமிழ் ரீமேக் தான் வர்மா திரைப்படம்.
இந்த படத்தில் நடிகர் விக்ரமின் மகன் அறிமுகமாக இருந்தார்.இந்நிலையில் அர்ஜுன் ரெட்டி படத்தை தமிழில் மீண்டும் எடுக்க இ-4 என்டெர்டெய்மென்ட் நிறுவனம் முடிவு செய்து உள்ளதாகவும் புதிய இயக்குனர் , நடிகர்கள் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் தெரிவிக்க பட்டு உள்ளது.