வேட்பு மனுக்கள் பரிசீலனை நேற்று நடந்தது. இதில் தகுதியான மனுக்கள் மட்டும் ஏற்கப்பட்டன. பூர்த்தி செய்யப்படாத, ஆட்சேபனைக்குரிய மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
எத்தனை மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது என்ற விவரத்தை வெளியிடுவதில் நேற்று மாலை குளறுபடி ஏற்பட்டது.
அகர வரிசைப்படி பட்டியலை வெளியிடும் பணியில் ஈடுபட்டிருந்த உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு முறையாக பயிற்சி வழங்கப்படாத நிலையில் இறுதி பட்டியலை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் வேட்பு மனு பட்டியல் வெளியிடுவது காலதாமதம் ஆகி உள்ளது.
வேட்பு மனுக்களை திரும்ப பெற நாளை (வியாழன்) கடைசி நாளாகும்.
இறுதி வேட்பாளர் பட்டியல் நாளை மாலை வெளியாகிறது. அதன் பிறகு சின்னங்கள் ஒதுக்கப்படுகிறது.
இதில் அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்டு, பா.ம.க., பகுஜன் சமாஜ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட 11 கட்சிகளுக்கு அந்தந்த கட்சிகளின் சின்னங்கள் ஒதுக்கப்படும்.