குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்புகள் விரைவில் வெளியாக உள்ளது

தமிழகத்தில் அரசுத் தேர்வுகளை நடத்தி வரும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்புகள் விரைவில் வெளியாக உள்ளது. ஆண்டுதோறும் தேர்வு நடைபெறும் விவரங்களை டி.என்.பி.எஸ்.சி. அட்டவணையாக வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில் நடப்பாண்டுக்கான தேர்வு விவரங்கள் கடந்த டிசம்பர் 2018-ல் வெளியிடப்பட்டது. அதன்படி இந்த மாத இறுதிக்குள் குரூப் 4 தேர்வு குறித்த விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ.), இளநிலை உதவியாளர், நில அளவையாளர் உள்ளிட்ட பணிகள் இந்த குரூப் 4 தேர்வில் அடங்கும். கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் குரூப் 4 தேர்வின் மூலமாக மொத்தம் 9,351 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.

கடந்த முறை குரூப் 4 தேர்வுக்கு மொத்தம் 20 லட்சம் பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். அவர்களில் 16 லட்சம்பேர் தேர்வை எழுதினார்கள்.

குரூப் 4 தேர்வை எழுதுவதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 12-ம் வகுப்பு தேர்ச்சி ஆகிய தகுதிகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.

பணிகளுக்கு ஏற்ப இந்த தேர்ச்சி அளவீடு மாறுபடும். இந்தாண்டுக்கான குரூப் 4 பணிகளுக்கான அறிவிப்பு ஜூன் 14-ம்தேதி வெளியாக அதிக வாய்ப்புகள் உள்ளன.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *