குரூப்-2 தேர்வு

தேர்வு தமிழகத்தில் இன்று நடைபெற்ற குரூப்-2 தேர்வில் 6 லட்சம் பேர் கலந்துகொண்டதாக தெரியவந்துள்ளது. தமிழகம் முழுவதும் குரூப்-2  எழுத்துத்தேர்வில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டனர். ஆனால் மொத்த காலிடக்கள் 1,199 ஆகும். இத் தேர்வு நாடு முழுவதும், அதாவது தமிழ்நாடு முழுவதும் 2,70,668 தேர்வு மையங்களில் நடைபெற்றது. மொத்தம் பெண்கள் மட்டும் 3,54,754 பேரும், ஆண்கள் 2,02,042 பேரும் கலந்து கொண்டர்கள்,மூன்றாம் பாலினம் 10 பேர் தேர்வு எழுதினார்கள்.. தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் இவர்கள் பணியில் அமர்த்த இத்தேர்வு நடைபெறுகிறது.இத் தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிகபட்சமாக மூன்றாவது வாரத்தில் வெளியாக வாய்ப்பு உள்ளது.இது மொத்தம் 300 மதிப்பெண்கள் கொண்ட தேர்வாகும். இவற்றில் மினிமம் 90 மதிப்பெண்கள் பெற வேண்டும். இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவிற்கும் 150 மதிப்பெண்கள் வழங்கப்பட்டு வருகின்றன. பொதுத்தமிழ் மற்றும் பொது ஆங்கிலத்தில் இருந்து 150 மதிப்பெண்களும், பொதுஅறிவு மற்றும் அறிவுத்திறன் 150 மதிப்பெண்களும் ஆக மொத்தம் 300 மதிப்பெண்கள் ஆகும். இவற்றில் மினிமம் 90 மதிப்பெண்கள் எடுத்தால் அடுத்த கட்டத்திற்கு செல்லலாம்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *