சென்னையில் நடைபெற்ற ரயில்வே துறை குரூப் டி தேர்வில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக புகார் எழுந்துள்ளது. ரயில்வே துறையில் குரூப் டி பிரிவில் மொத்தம் 62,907 பணியிடங்களை நிரப்ப கடந்த ஆண்டு எழுத்து தேர்வு நடைபெற்றது. செப்டம்பர் 17 முதல் டிச.17ம் தேதி வரை நடைபெற்ற இந்த தேர்வுக்காக இந்தியா முழுவதும் 1 கோடிக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர். இதையடுத்து, தேர்வு முடிவுகள் கடந்த மார்ச் 4ம் தேதி வெளியிடப்பட்டது.
தேர்வின் மொத்த மதிப்பெண்கள் 100 என்று இருக்கும் நிலையில் கவுகாத்தி, சண்டிகர், அகமதாபாத் போன்ற வடமாநில நகரங்களை சேர்ந்தவர்களுக்கு மட்டும் 109, 354 என மதிப்பெண்களை வாரி வழங்கி இருக்கின்றனர். நியாயமான முறையில் தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் என்றும் தமிழகத்தை சேர்ந்த தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.