குருபெயர்ச்சி பலன்கள் 12 ராசிகளுக்கும் 2018-2019

கணிதம்:

புலவர் இரெ.வே.சுப்பிரமணியன்.M.A,M.Phil,DA.
(கவிஞர் கணியன் பேரொளி மணியன்)
தமிழ்நேரலை

குருபெயர்ச்சி வழிகாட்டும் முறைகள்:

நவகிரங்களில் முதன்மையான சுபகிரகமாகிய குரு,புத்திர பாக்கியமும்,யோகமும்தந்து வம்சத்தின் வளர்ச்சிக்கு வழிகாட்டுபவர். உலகில் மேதைகளாகவும், ஞானிகளாகவும், தலைவணங்காத தலைமைப்பதவிகளைத் தந்து சாதனைசெய்பவர். தெய்வீகமும், வேத ஞானங்களையும், மனதூய்மையும் தந்து நம்மை வழிநடத்துபவர். “பொன்னன்” என்று பெயர் பெற்று, பொன்னை உலோக மாகவும்,புஷ்பராகக் கல்லை நவரெத்தினமாகவும், மஞ்சள் நிறத்தைத் தனதாக்கி கொண்ட குரு, கஜானா நிரப்பும் நாயகன் ஆவார்.

இனிப்புச்சுவையை விரும்பும் பிரஸ்பதி தேவகுரு, தென்முகக்கடவுள், குருதெட்சிணாமூர்த்தி என பலதிருநாமங்களை உடையவர். நல்ல கல்வியும், நல்ல வேலையும், புத்திகூர்மையும், குழப்பங்களுக்குத் தீர்வுகானும் ஆராய்ச்சி அறிவும் நல்ல பிள்ளைகளையும், நல்ல அழகுநிறைந்த வரனையும் தந்து வாழ்வை வளமாக்குபவர்.

திருமணயோகத்தையும், அதிலுள்ள தடைகளையும் தகர்த்து. வெற்றி தந்து சகல சக்திகளையும், அனைத்துத்திறனையும் தரவல்ல அ/மிகு பகவானை வியாழக்கிழமையில் வழிபடுவதின் மூலம் அனைத்தையும் பெற்று வாழ்வில் வளம் பெறலாம்.

ஒருராசியிகல் ஓராண்டுகலாம் நிலை பெற்றிருக்கும் குருபகவான், நடைபெறும் விளம்பி ஆண்டு,புரட்டாசி மாதம் 18-ஆம் தேதி 04-10-2018 வியாழக்கிழமை இரவுமணி 09.55க்கு துலாம் ராசியிலிருந்து விருச்சிகராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். 12-ராசிக்கார்களும் பின்கூறும் பலன் களைப் படித்துணர்ந்து வாழ்வில் ஒளிமயமான உன்னதம் பெற வழிகாட்டி வாழ்த்துகிறேன்.

மேஷம் :
(அசுபதி,பரணி,கார்த்திகை-1)

செவ்வாயை இராசி நாதனாக உடைய நீங்கள் நல்ல மனோதிடத்தோடு, எதற்கும் கலங்காது எதனையும் ஏற்றுக் கொள்ளும் உங்களின் இராசிக்கு சப்தமஸ்தானத்தில் அமர்ந்து அளவற்ற நன்மைகளைச் செய்த குரு பகவான் 4-10-2018 முதல் எட்டாம் இடத்தில் மாறப்போகிறார்.
“குருபார்க்க கோடி தோழ நிவர்த்தி” என்பது ஜோதிடமொழியாகும்.

உங்கள் ராசி நாதன் செவ்வாய் மகரத்தில் உச்சமாக இருந்து உங்கள் ராசியை பார்த்து மேலும் ஒரு பலமாகும். எட்டாம் இடத்தில் மாறப்போகும் குரு, உங்களுடைய விரையஸ்தானத்தையும், குடும்பஸ்தானத்தையும் ,மாதாஸ்தானத்தையும் முறையே 2,4,12 வது பார்வையாக பார்க்கிறார்.

அத்தகைய குரு பார்வையால் செலவினங்கள் குறைந்து சேமிப்புப் பெருகும். அமைதியான மனநிலை உண்டாகி நல்ல தூக்கத்தைப் பெறுவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும்; நல்ல வருமானம் இந்த ஆண்டில் கிடைக்கும். கண் சம்பந்தபட்ட நோய்களெல்லாம் விலகி, நல்ல பார்வை பெறுவீர்கள்.

நல்லவருவாய் அதிகரிப்பால், வீடு நிலம்,வாகனம் வாங்கும் சூழ்நிலை கைகூடும். கல்வியில் மேம்பாடும், வேலைவாய்ப்பும் உண்டாகும். பழைய சொந்தங்களுடன் அன்பும், தொடர்பும் எற்படும். அஷ்டமத்து குருவானலும் நல்ல வாய்ப்புகளைத்தருவதோடு திசா புத்தியும் நன்றாக அமைந்தால் உங்களை யாராலும் வெல்ல முடியாது. விசாகம்-4,அனுஷம், கேட்டை நட்சத்திரங்கள் உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமாக அமைவதால்,அன்று எதனையும் தவிர்த்தல் நல்லது.

ரிஷபம்:

(கார்த்திகை 2,3,4 பாதங்கள் ரோகிணி,மிருகசீரிடம் 1,2)

தன்னால் எதையும் சாதிக்க இயலும் என்ற தன்னம்பிக்கையோடு முடிவெடுக்கும் ரிஷப ராசி நேயர்களே, 6-இல்(ரோகஸ்தானம்)குருவும், அஷ்டமத்தில் சனியும், உங்களை சற்றே குழப்பத்தில் ஆழ்த்தினாலும் 4-10-2018முதல் சப்தம ஸ்தானத்திற்கு வரப்போகும் குருவால் தெளிவு பெறப் போகிறீர்கள்.
கல்வி,தொழில், வேலைவாய்ப்பில் இருந்ததேக்கநிலை மாறி, நன்மை அடையும் காலமாக வரும் ஓராண்டு உங்களுக்கு அமையும்.

மேலும் 11-ஆம் இடத்தையும், மூன்றாம் ராசியையும், குருபார்ப்பதால் உடன்பிறப்புக்களுடன் நல்ல உறவும், உதவியும் பெறுவீர்கள். பேச்சு வன்மையால் பிறரை கவடர்ந்து நல்லபுகழைப் பெறுவீர்கள். அணிகலன்கள் வாங்கும்யோகமும் கணவன் மனைவியிடையே நல்லுறவும் நிலவும்.
மூத்த சகோதரர்களால் லாபமும், உதவியும் பெறுவீர்கள்.தொழில், உத்தியோகத்தில் நல்லபெயரும், பணவரவும் வரும். உங்கள் ராசி நாதன் சுக்கிரன் தற்போது ஆட்சிபெற்று உங்கள் பன்னிரெண்டாம் இடத்தைப் பார்ப்பதால் செலவினங்கள் குறைந்து வரவு அதிகரிக்கும். நல்லபலன்களை அதிகப்பெறப்போவதால் உங்கள் வாழ்வில் மறக்கமுடியாத ஆண்டாக அமையும். மூலம்,பூராடம்,உத்திராடம்-1 ஆகிய நட்சத்திரங்கள் உள்ள நாட்கள் சந்திராஸ்டம நாளாக அமைவதால் எதனையும் தவிர்த்து வாழ்வில் வளம் பெறுக புத்திர பாக்கியம் கிட்டும்.


மிதுனம்:

(மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3)

இனிய சொற்களால் பிறரைக் கவரும் மிதுன ராசி நேயர்களே, இதுவரை உங்கள் ராசிக்கு 5-ஆம் இடத்தில் நின்று பலன் தந்த குரு 6-ஆம் இடத்திற்கு வருகிறார். சனியின் ஏழாவது பார்வை உங்கள் ராசி உள்ளது.சொல்லில் சோர்வில்லாத மிதுனராசி நேயர்களே 6-இல் வரும் குரு உங்கள்ராசி 12-ஆம் இடத்தையும் (விரயஸ்தானம்) 2-ஆம் இடத்தையும் குடும்பஸ்தானம் 10-ஆம் இடத்தையும் (ஜீவனஸ்தானம்) குரு பார்ப்பதால் உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் பதவி உயர்வுகள் நன்றாக அமையும்.

உங்கள் வாழ்வில் வீண் செலவினங்கள் குறைந்து, வருவாய் பெருக்கம் ஏற்படும். மனைவி சொல்லை மந்திரமாக ஏற்கும் நீங்கள் குடும்பத்தில் நல்ல ஒற்றுமையும், சுகபோகங்களும் குறைவில்லாமல் கிடைக்கும்.

நறுமணத்துடன் எப்போதும் இருக்கும் உங்கள் வாழ்வில் நல்ல மாற்றம் ஏற்படும். கண் மற்றும் சிறு நீரக நோயால் பாதிப்பு இருந்தால் 24.11.2018 க்கு பிறகு நோய் நீங்கி நலம் பெறுவீர்கள் 12-ஆம் இடத்தைக் குரு பார்ப்பதால், செலவுகள் குறைந்து, வருவாய் பெருகுவதோடு மனஅமைதி பெற்று நல்ல உறக்கத்தால் மனம் தெளிவு பெறுவீர்கள். மொத்தத்தில் இன்பமும் துன்பமும் மாறிமாறிவந்தாலும் நற்பலன்களே அதிகமாக கிடைக்கப் பெறுவீர்கள், உத்திராடம் 2,3,4., திருவோணம், அவிட்டம் 1,2 சந்திராஸ்டமாக அமைவதால் சுப செயல் தொடக்கத்தைத் தவிர்ப்பது நலம்தரும்.

கடகம்:

(நட்சத்திரம் புனர்பூசம் 4,பூசம்,ஆயில்யம்)

தன பல பெற்று, குருபக்தியோடு சமர்த்தான குணம் படைத்த கடக ராசி நேயர்களே, உங்கள் வாழ்வில் வசந்தம் வீசும் ஆண்டாக குரு பெயரும் நிகழ்வால் அமையும். உங்கள் ராசிக்கு 5-ஆம் ரசியில் 04.10.2018 முதல் குரு இருக்கப் போகிறார்.
மேலும் உங்கள் ராசிக்கு 9-ஆம் வீட்டையும் 11 ஆம் வீட்டையும் குரு பார்ப்பதால் உங்கள் வாழ்வில் இதுவரை இருந்த தடங்கல்கள் மாறி தென்றல் வீசப்போகிறது. பூர்வீகசொத்துகள் கிடைக்க வழி பிறக்கும். தந்தையால் பயன் பெறுவீர்கள்.
லாபஸ்தானத்தை குரு பார்ப்பதால் வருவாய் பெருகி, வீடு,மனை, வாகனங்கள் அணிகலன்கள் வாங்கும் அதிர்ஷ்டத்தைப் பெறுவீர்கள். கணவன் மனைவியிடையே இருந்த பிணக்கு நீங்கி புத்திர பாக்கியம் கைகூடும். தர்ம சிந்தனை மேலோங்கும். கடவுள் பக்தி மிகுந்த ஆன்மிகப் பயணங்கள் ஏற்படும். மூத்த சகோதரத்தால் நன்மை அடைவீர்கள்.
மொத்தத்தில் குருபெயர்ச்சிக்குப் பிறகு வாழ்வில் தேக்கம் நீங்கி, நண்மைகளால் மகிழ்ச்சி அடைவீர்கள்.புதியயோகங்கள் கிடைக்கும். அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3 நட்சத்திர நாட்கள் சந்திராஷ்டமாகையால் புதிய பயணங்கள் சந்திப்புகள் ஆகியவற்றை தவிர்ப்பது நல்லது. இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் வசந்தம் வீசும் ஆண்டாக அமையும்.

 சிம்மம்:

(நட்சத்திரம் மகம், பூரம், உத்திரம்-1ஆம் பாதம்)

கம்பீர சொல்லும், திடமான அறிவும் விரைந்து செயல்படும் ஆற்றலும் உடைய சூரிய ராசி ஆகிய சிம்ம ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 3-இல் நின்ற குரு 4-ஆம் இடத்திற்கு 04.10.2018 அன்று பெயர்ச்சி ஆகிறார்
உங்கள் ராசிக்கு 8-ஆம் வீட்டையும் 10-ஆம் வீட்டையும் 12-ஆம் வீட்டையும் குரு பார்க்கிறார். அதனால் உங்கள் வாழ்வில் இதுவரை தேங்கிக் கிடந்த அனைத்தும் வெற்றியுடன் நிறைவேறும் 4-ஆம் ராசியில் குரு நிற்பதால் வீடு, மனை வாங்கும் யோகம் பெறுவீர்கள். தாயால் நன்மை அடைவீர்கள்.
வேலைவாய்ப்பில், அரசு வேலை அமைய வழி உண்டு. அரசின் தொடர்பால் நன்மை அடைவீர்கள். கோபம் உங்கள் பிறவிக்குணம் என்றாலும், எல்லோரையும் அரவணைத்துச் செல்லும் ஆற்றல் மிகவும் உண்டு.
சகலகலா வல்லுனராகிய நீங்கள் 13.2.2019 வரை யோசித்து பேசுவதும், நாவை அடக்கி ஆளுதலும் உங்கள் வாழ்வில் வளம் சேர்க்கும். உங்கள் ராசியின் அதிபதியே அனைத்திற்கும் தலைமை என்பதால், அந்தராசி நேயராகிய நீங்களும் என்றும், எதிலும் முன் நிற்பதையே விரும்புவீர்கள். ஜீவஸ்தானத்தை குரு பார்ப்பதால் அரசு வேலை அமைய வாய்ப்பு உண்டு. உத்தியோக உயர்வு ஏற்படும் பூரட்டாதி-4, உத்திரட்டாதி, ரேவதி உள்ள நாட்களில் வெளி வேலை தவிர்த்து அமைதியாக இருந்தால் நலம். குறைகள் நீக்கி நல்ல வாய்ப்பு பெறும் ஆண்டாக அமையும்.

கன்னி :

(உத்திரம்-2,3,4, ஹஸ்தம், சித்திரை-1,2)

நல்ல ஆசாரமும், நன்னடத்தையும் உடைய கன்னி ராசி நேயர்களே உங்கள் ராசியில் 2-ஆம் இடத்தில் நின்ற குரு 3-ஆம் ராசியில் 4-10-2018 முதல் நிலவப்போகிறது. உங்கள் ராசிக்கு 7,9,11 ஆகிய இடங்களை குரு பார்க்கின்றார்.
அதனால் குடும்பத்தில் கணவன் மனைவி இடையே நிலவி வந்த விரிசல்கள் விலகி மகிழ்ச்சி உண்டாகும். தொழில் பெருகும் பூர்வ புண்ணிய ஸ்தானமாகிய 9-ஆம் இடத்தைப் பார்ப்பதால் பூர்வீக சொத்துகள் கிடைக்க வாய்ப்புண்டு வழக்கு விரிசல்கள் விலகி நலம் தரும்.
தர்ம குணம் உடைய உங்கள் வாழ்வில் லாபஸ்தானத்தைக் குரு பார்ப்பதால் வருவாய் பெருகி, தொழில் வளம் பெற்று வேலைவாய்ப்பில் அதிக வருமானத்தை உண்டாக்கி வாழ்வில் வளத்தைத் தரும்.
இந்தக் குருப்பெயர்ச்சியில் உங்கள் வாழ்வில் இழந்ததைப் பெறுவீர்கள். நல்ல உடல் நலம் கிடைக்கும். 10-வது சனிப் பார்வையால் உங்கள் வாழ்வில் ஏற்படும் இடையூறுகள் விலகி மகிழ்ச்சி அடைவீர்கள். ஆன்மீகப் பயணத்தில் ஆனந்தம் அடைவீர்கள். தான தர்மத்தால் மனம் மகிழ்ச்சி உண்டாகும்.
மொத்தத்தில் தடைகள் விலகி நன்மை பெறும் காலமாக அமையும். அசுபதி, பரணி, கார்த்திகை-1 இல் சந்திராஷ்டமம் ஆதலால் அமைதி காப்பது வாழ்வில் வளம் சேர்க்கும்.

 துலாம்:

(சித்திரை 3,4,சுவாதி,விசாகம் 1,2,3)

பொறுமை, நல்லறிவு, வல்லமை அனைத்தும் அமையப்பெற்ற நீங்கள் எதனையும் ஆராய்ந்து தேர்ந்து முடிவு செய்யும் துலா ராசி நெயர்களே இதுவரை உங்கள் ராசியில் நின்ற குருபகவான் 2-ஆம் வீடாகிய குடும்பஸ்தானத்தில் 04-10-2018 இல் உலவப்போகிறார். 2-இல் நின்ற குரு 6,8,10 ஆகிய இடங்களை பார்க்கிறார்.
ராசிக்கு ஆறாம் இடத்தைக் குரு பார்ப்பதால் எதிரிகள் ஒழிந்து போவார்கள் வழக்கு, கடன் ஆகியவை தீர்ந்து வாழ்வில் மகிழ்ச்சி நிலவும்.
8-ஆம் இடத்தைப் பார்ப்பதால் ஆயுல் நிறைவும், இதுவரை தேக்க நிலையில் நின்ற உங்கள் வாழ்வு, நற்செயல்களால் வளம்பெறும். 10-ஆம் இடமாகிய ஜீவன ஸ்தானத்தை குருபார்ப்பதால், புதிய வேலை வாய்ப்பும், உத்தியோக உயர்வும், செய்யும் தொழிலில் நல்ல முன்னேற்றமும் ஏற்படும்.
மக்களை அரவணைத்துச்செல்லும் பிரியமும்,இரக்கமும் உடைய உங்கள் செயலால் அனைத்து உயிர்களும் நலம் பெறும், அதனால் உங்கள் வாழ்வும் இன்பம் உடையதாக அமையும்.
மொத்தத்தில் இந்த குருபெயர்ச்சியால் நோயரற்ற வாழ்வும், அனைத்துத் தடைகளும் விலகி, புதிய வேலை வாய்ப்பும், உத்தியோக உயர்வும் பெறுவீர்கள். கார்த்திகை 2,3,4, ரோகினி,மிருகசீரிடம் 1,2 ஆகிய நாட்களைத் தவிர்ப்பது நன்மைதரும்.

விருச்சிகம்:

(விசாகம்-4, அனுஷம், கேட்டை)

இனிமையான பேச்சாலும், எதையும் மறைக்காமல் கூறும் குணமும் கொண்ட விருச்சிகராசி நேயர்களே, இதுவரை 12-ஆம் இடத்தில் நின்று பல இடர்களைத் தந்த குருபகவான் உங்கள் ராசியில் 04.10.2018 முதல் சஞ்சரிக்க உள்ளார்.
ஏழரை பாதசனியால் அவதிபடும் உங்கள் வாழ்வில் வர வர நன்மை உடைய நாளாக இந்த ஆண்டு இனி மேல் அமையும். உங்கள் ராசிக்கு 5,7,9 ஆகிய இடங்கள் குரு பார்ப்பதால் புத்திரர்களால் நண்மையும் புத்திரதோஷம் நீங்கி புத்திர பாக்கியமும் உண்டாகும்.
கணவன் மனைவி இடையே நிலவி வந்த பிணக்குகள் விலகி, மகிழ்ச்சியான இன்பம் நிலவும்.திருமணத் தடைகள் விலகி திருமணம் கைகூடும். நல்ல நண்பர்களின் சேர்க்கையால் மகிழ்ச்சி உண்டாகும்.
கடவுள் பக்தி மேலிட்டு ஆன்மீக பயணங்கள் செய்வீர்கள், குரு உபதேசம் பெற்று நற்சீலராக உயர்வீர்கள். எதனையும் எதிர்பார்க்காமல் சட்டென்று கடும் சொற்களால் பேசுபவராக இருந்தாலும், அதனை மறந்து சொந்த பந்தகளை அரவணைத்துச் செல்லும் பண்புடையவர்கள். மொத்தத்தில் இந்த குருபெயர்ச்சி குடும்பத்தில் ஒற்றுமையும், பிள்ளைகளால் நன்மையும் அடைவீர்கள். மிருகசீரிடம்-3,4, திருவாதிரை, புனர்பூசம்-1,2,3 ஆகிய சந்திராஷ்டம நாளை தவிர்த்து புத்திமானாகிய நீங்கள் வாழ்வில் வளம் பெறுக.

 

தனுசு:

( நட்சத்திரம் மூலம், பூராடம், உத்திராடம்-1)

நற்குணங்களும், நல்ல சொற்களையும், சத்தியவானாகவும், எதனை விட்டுக்கொடுக்காத தன்மானம் உள்ளவராகவும் உள்ள தனுசு ராசி நேயர்களே, உங்கள் ராசி நாதன் ஆகிய குரு பகவான் 04.10.2018 இல் 12-ம் இடத்திற்கு வர உள்ளார்.
தொடர்ந்து ஏழரை சென்ம சனியாலும், இராகு கேது வாலும் தொடர்ந்து துன்பங்களால் அவதிப்படும் உங்களுக்கு குருவரவும் விரையஸ்தானமே ஆனாலும் உங்கள் ராசிக்கு 4,6,8 ஆகிய இடங்களை குருபார்ப்பதால் நீங்கள் மனம் தளரவேண்டியதில்லை.
அன்னையின் அரவணைப்பும், அன்பும் உங்களுக்குப்பெரிதும் கிடைக்கும். வீடு, வாகனம் நிலம் வாங்குவீர்கள். எதிரிகள் தொல்லை நீங்கும் வழக்கு, கடனிலிருந்து விடுபடுவீர்கள்
நோயால் நீங்கள் அவதிபட்டால் நிச்சயம் விடுபடுவீர்கள். விபத்துக்களில் நடைபெறாமல் கவனம் தேவை. அப்படி ஏற்படினும் ஆயுளைப்பாதிக்காது.
சுகத்தையும், போகத்தையும் அதிகம் விரும்பும் நீங்கள் எந்த ஒரு செயலிலும் கவனம் தேவை. அதிக மாகபேசும் நீங்கள் பேச்சைக்குறைப்பது நலம். 13.2.2018 இல் நடைபெறும் ராகு,கேது பெயர்ச்சி உடலாலும், உள்ளத்தாலும் உங்களுக்கு மகிழ்ச்சி கிடைக்கும். அதுவரை மௌனமாக இருந்து மகிழ்ச்சி பெறுங்கள். புனர்பூசம்-4, பூசம், ஆயில்யம் உள்ள நாட்களைத்தவிர்த்து வாழ்வில் வளம் பெறுங்கள்.

மகரம்:

(உத்திராடம்-2,3,4. திருவோணம், அவிட்டம்-1,2)

திடமானபுத்தியுடன் சுயநலவாதியாகவும் பரிமனப்பிரியனாகிய நீங்கள், ஏழரைவிரைய சனியாலும், பத்தில் குருவாலும் அதிக விரையங்களைச் சந்தித்த உங்களுக்கு 4.10.2018-இல் குரு உங்களுக்கு 11-ஆம் இடத்தில் சஞ்சரிக்கப் போவது நற்பலங்களைத்தரும்.
உங்கள் ராசியிலிருந்து 3,5,7 ஆகிய இடங்களை குரு பார்ப்பதால் இளைய உடன்பிறப்புக்களால் நன்மை அடைவீர்கள். அணிகலன்கள் வாங்கும் அதிர்ஷ்டம் பெறுவீர்கள். வாழ்வில் நிறைத்த போகம் கிடைக்கும்.
புத்திரர் மற்றும் சந்ததியினரால் நன்மை உண்டாகும். மேல் படிப்பினைத் தொடர்வீர்கள் தாய்மாமனால் உதவி கிடைக்கும். உங்கள் நற்செயலால் புகழ் கிடைக்கும்.
கணவன் மனைவி உறவு பலப்படும். திருமண தடைநீங்கித் திருமணம் கைகூடும். நல்ல நண்பர்களால் உதவி பெறுவீர்கள். ராசியில் கேதுவும், 7-ல் ராகுவும் உள்ளதால் போக்குவரத்தில் கவனம் தேவை.
கவர்ச்சியான தோற்றமும், கனிவான பேச்சும், வாசனைத் திரவியங்களில் நாட்டமும் கொண்ட நீங்கள் பெண்கள் விழையத்தில் கவனம் தேவை. போக்குவரத்திலும் அப்படியே.
மொத்தத்தில் செலவும், துன்பமும் குறைந்து நிழலில் இளைப்பாறுவதுபோல இருப்பினும் அனைத்திலும் முன்யோசனையுடன் நடத்தால் வாழ்வில் வெற்றி பெறலாம். மகம், பூரம், உத்திரம்-1 சந்திராஷ்டம நாளாகும். சுபநிகழ்வுகளை தவிர்த்து வாழ்வில் முன்னேற்றம் காணுங்கள்.

கும்பம்:

(அவிட்டம்-3,4, சதயம், பூரட்டாதி-1,2,3)

திடமான அறிவும், பித்த சரீரமும், சகிப்புத் தன்மையும் தற்புகழ்ச்சி குணமும் கொண்ட கும்பராசி நேயர்களே, இதுவரை 9-ஆம் இடத்தில் அமர்ந்த குரு நல்ல பலயோகங்களைத் தந்தவர் 4.10.2018 முதல் 10-ஆம் இடத்தில் அமரப்போகிறார் உங்கள் ராசிக்கு 2,4,6 ஆகிய இடங்களைப் பார்க்கிறார்.
குடும்பத்தில் தன வரவு பெருகி வாழ்வில் வளம் ஏற்படும். கண்சம்பந்தபட்ட நோய்களிலிருந்து நிவாரணம் பெறுவீர்கள் தாய்வழியில் நன்மை கிடைக்கும். சொந்தங்களின் நலனும், வீடு, வாகனம் வாங்கும் யோகத்தையும் குருதருவார்.
எதிரிகள் காணாமல் போய்விடுவார்கள். நோயிலிருந்து விடுபடுவீர்கள். வழக்கு, கடன் ஆகியவற்றிலிருந்து விடுதலை கிடைக்கும். நோய்,கடன்,வழக்கு நீங்குவதால் வாழ்வு ஒளிபெறும் பால்வினை நோய்களிலிருந்து விடுபடுவீர். தண்டனையிலிருந்து விடுதலை கிடைக்கும். வியாபாரம் விருத்தியாகும் பதவி உயர்வு கிடைக்கும் 10-ல் குரு நின்று பணவிழையத்தில் தடைகள் வந்தாலும், தனவரவால் தடைகளை தகர்ந்து விடுவீர்கள்.
மூன்றாவது பார்வையாக சனிபார்ப்பதாலும் ஆறில் ராகு உள்ளதாலும் 13.2.2019 வரை எடனையும் நன்கு யோசித்துச் செய்யவேண்டும். உத்திரம்-2,3,4, அஸ்தம், சித்திரை-1,2, சந்திராஷ்டமம் நாள் ஆகையால் பயணம்,சந்திப்பு, தொடக்கம் ஆகியவற்றை தவிர்த்து பேரின்ப வாழ்வு பெற வழி காணுங்கள்.

மீனம்:

(பூரட்டாதி-4, உத்திரட்டாதி, ரேவதி)

பக்தி, விசுவாசம், சத்தியவான், இரக்கக்குணம் என பல சிறப்புகளைக் கொண்ட மீனராசி நேயர்களே! அஷ்டமத்துக் குருவாக விளங்கியவர் 04.10.18 முதல் 9-இல் அமர்ந்து உங்கள் வாழ்வில் ஒளியேற்றப் போகிறார்.
குடும்பம், பணம் இவற்றில் நிகழ்ந்த சிக்கல்கள் விலகி நல்ல முன்னேற்றம் ஏற்படும். சொந்தங்களின் தொடர்பு ஏற்படும். செலவினங்கள் குறைந்து தனவரவு மிகும். மனக்கவலைகள் விலகி நல்ல உறக்கத்தைப் பெற்றுத் தெளிவு பெறுவீர்கள்.
இளைய உடன் பிறப்புக்களால் உதவி கிடைக்கும். பேச்சுத் திறனும், மனோபலமும் கூடிப்புகழ் உண்டாகும். 5-ஆம் வீட்டை குரு பார்ப்பதால், புத்திரபேறு உண்டாகும். பிள்ளைகளால் நற்பலன்கள் கிடைக்கும்.
தந்தை வழி உறவு பலப்படும். தர்மசிந்தனை, இறை பக்தி உண்டாகும். குருபக்தி மிகும். தானம், தருமம் செய்தல், ஆலயத்திருபணியில் ஈடுபடும் வாய்ப்பு கிடைக்கும். தாய்மாமன் வகையில் உதவி கிடைக்கும். பிறர் போற்றும் வகையில் உங்கள் செயல்களில் மாற்றமும், முன்னேற்றமும் உண்டாகும். மேல் படிப்புக்கு வழிகிடைக்கும்.
மொத்தத்தில் 9-இல் அமரப்போகும் குரு, உங்கள் ஓராண்டு காலவாழ்வை நிச்சயம் ஒளிமயமாக்குவார். சித்திரை-3,4, சுவாதி, விசாகம்-1,2,3 நட்சத்திரம் உள்ள நாட்களைத் தவிர்த்து குருவருளால் குபேரனாகுங்கள் வாழ்வில் வளம் பெறுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *