குயின் ஆப் பாக்ஸிங்

இந்தியாவின் குத்துச்சண்டை அரசி மேரிகோம் பல்வேறு சாதனைகளைப் படைத்து வருகிறார். தற்போது நடந்து வரும் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பின் தனது அபாரத் திறமையை வெளிப்படுத்தி வருகிறார். அதன் விளைவாக இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

இது 48கிகி பிரிவுக்கான இறுதிப்போட்டி ஆகும். நேற்று வடகொரியாவில் கிம் ஹயாங்யை எதிர்கொண்டார். சிறப்பாகச் செயல்பட்டு 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.

ஏற்கனவே ஏழு முறை இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார். 2010ஆம் ஆண்டின் சாம்பியன் என்பது நினைவுகூறத்தக்கது. இவர் இறுதியாக ஹன்னாவை சந்திக்கிறார். இவர் உக்கிரைன் நாட்டைச் சார்ந்தவர். “எப்படியும் வெற்றி பெறுவேன்” என மேரிகோம் நம்பிக்கை தெரிவித்துள்ளார். வெற்றி பெற வாழ்த்துக்கள்!! உங்களை நினைத்துப் பெருமைப்படுகிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *