குப்பத்து ராஜா விமர்சனம்

ஜி.வி. பிரகாஷ் குமார் நடித்து இசையமைத்து உள்ள குப்பத்து ராஜா திரைப்படம் இன்று வெளிவந்து உள்ளது. பாபா பாஸ்கர் இயக்கி உள்ள இந்த படத்தில் பார்த்திபன், பூனம் பஜ்வா, எம்.எஸ். பாஸ்கர், யோகி பாபு, கிரண் உள்ளிட்டோர் நடித்து உள்ளனர். இந்த படத்தின் மூலம் பல்லக் லால்வாணி தமிழில் அறிமுகமாகி உள்ளார்.

 

வட சென்னையில் ஒரு பகுதியில் உள்ள மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறார் பார்த்திபன். ஜி.வி.பிரகாஷ்ன் அப்பா எம்.எஸ். பாஸ்கர்ம்,பார்த்திபனும் நண்பர்கள். ஆனால் பார்த்திபனுக்கும் ஜி.வி.பிரகாஷ்க்கும் மோதல் அடிக்கடி ஏற்படுகிறது. அந்த குப்பத்தில் வாழ்ந்து வரும் நாயகி பல்லக் லால்வாணியை ஜி.வி.பிரகாஷ் காதலித்து வருகிறார்.

 

 

இந்நிலையில் ஜி.வி.பிரகாஷ் வீட்டுக்கு அருகில் புதியதாக குடிவருகிரார் பூனம் பஜ்வா. இவரால் ஜி.வி.பிரகாஷ்ன் காதலில் குழப்பம் வருகிறது. அந்த குப்பத்தில் வசிக்கும் சிறுவன் ஒருவன் திடீரென காணாமல் போகிறான். அடுத்த நாளில் ஜி.வி.பிரகாஷ்ன் அப்பா எம்.எஸ். பாஸ்கர் கொலை செய்யப்படுகிறார்.

 

தன்னுடைய அப்பாவை கொலை செய்தது பார்த்திபன்தான் என நினைத்து அவரை கொலை செய்ய துடிக்கிறார் ஜி.வி.பிரகாஷ். ஒரு கட்டத்தில் கொலை செய்தது பார்த்திபன் இல்லை என தெரியவர இருவரும் சேர்ந்து கொலைகாரனை தேடுகின்றனர். கொலையாளி யார், எம்.எஸ். பாஸ்கர் ஏன் கொலை செய்யபட்டார்,கடத்தப்பட்ட சிறுவன் என்ன ஆனான் என படத்தின் மீதி கதை விறுவிறுப்புடன் சொல்கிறது.

ஜி.வி.பிரகாஷ் பக்கா லோக்களாக வட சென்னை பாஷை பேசி நடித்து உள்ளார்.ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் பல்வேறு படிநிலைகளை அடைந்து உள்ளது அவரது நடிப்பின் மூலம் தெரிகிறது.தைரியமான வட சென்னை பெண்ணாக நடித்து உள்ள பல்லக் லால்வாணியும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.

பார்த்திபன் தனது நக்கல் நையாண்டி மிகுந்த நடிப்பை செம்மையாக வெளிப்படுத்தி உள்ளார். பூனம் பஜ்வா தனது கதாபாத்திரம் உணர்ந்து நடித்து உள்ளார். யோகி பாபுவின் காமெடி பெரிதாக ஒன்றும் எடுபடவில்லை.எம்.எஸ்.பாஸ்கர் ,மனோகர், கிரண், அஜய் ராஜ் உள்ளிட்டோரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.

 

 

 

ஜி.வி. பிரகாஷ்குமாரும் படத்திற்கு தேவையான லோக்கலான இசையை வழங்கி உள்ளார். பாடல்களும் ரசிக்கும் விதத்தில் உள்ளன. வட சென்னை பகுதிகளை நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறார் ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசாமி. எடிட்டிங் பணிகளை பிரவின் சிறப்பாக செய்து உள்ளார்.

 

நடன இயக்குனராக இருந்து திரைப்பட இயக்குனராக இருந்த படத்தின் மூலம் மாறியுள்ளார் பாபா பாஸ்கர். படத்தில் சில காட்சிகள் மிகைப்படுத்தி காட்டபட்டு உள்ளதும், சில காட்சிகள் நாடக  தனமாகவும் அமைந்து இருப்பது படத்தின் குறைகள் ஆகும்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *