அரபிக் கடலில் உருவாகியுள்ள ‘வாயு’ புயுல், குஜராத்தில் நாளை கரையைக் கடக்க உள்ளது. இதனால், அம்மாநிலத்தின் கடற்கரையோரம் உள்ள 3 லட்சம் பேர் பத்திரமான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கட்ச் பகுதி முதல் தெற்கு குஜராத் வரை உள்ள கடற்கரையை ஒட்டியுள்ள இடங்கள் ‘ஹை அலெர்ட்டில்’ வைக்கப்பட்டுள்ளன. கடற்கரையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் இருக்கும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்றும் நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வாயு புயலுக்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.