கிருபானந்த வாரியாரின் ஆன்மிகத் சிந்தனைகள்

விளக்கு நமக்கு எத்தனை வண்ணமாக உதவி செய்கிறது என்பதை நாம் அது இல்லாதபோதுதான் உணர முடியும். தாய் நம்மை எப்படியெல்லாம் வளர்க்கின்றாள் என்பதை தாய் இல்லாத பொதுதானே உணர முடிகிறது.

 

பறவைகட்கு இரு சிறகுகள்; மனிதனுக்கு இரு கால்கள், இரு கைகள், இரு கண்கள். புகை வண்டிக்குத் தண்டவாளங்கள் இருப்பதுபோல் மாணவர்களுக்கு இரு குணங்கள் இருக்க வேண்டும். ஒன்று அடக்கம், மற்றொன்று குருபக்தி. இந்த இரு குணங்கள் உள்ள மாணவன் தான் முன்னேற்றமடைவான்.

 

இன்பமான சொல்லும், சிரித்த முகமும், பார்வையும், நண்பர்களின் சொல்லைக் கேட்க வேண்டுமென்ற எண்ணமும், அவர்கலைக் கண்டவுடன் சந்தோஷப்படுதலும் ஆசையில்லாதவனின் லட்சணங்களாகும்.

 

தீப்பந்தத்தைக் கீழ்நோக்கிப் பிடித்தாலும் அதன் ஜீவாலை மேல்நோக்கி எழுவதுபோல் உயர்ந்த குணத்தை கீழ்ப்படுத்த சொப்பனத்திலும் முடியாது.

 

மகிழ்ச்சி என்பது அவரவர் மனநிலையைப் பொறுத்தது. பணக்காரரோ, ஏழையோ யாராக இருந்தாலும் போதும் என்ற மனதை  இறைவனிடம் வேண்டிப் பெற வேண்டும்.

 

முதுமைக்கு தேவையானதை இளமையிலும், மறுபிறவிக்கு தேவையானதை இப்பிறவியிலும் தேட வேண்டும்.

 

கண்ணிக்குத் தெரிந்த உயிர்களுக்குத் தொண்டு செய்வதோடு, கண்ணுக்குத் தெரியாத கடவுளுக்கும் தொண்டு செய்ய வேண்டும்.

 

கல்வி, தானம், உடல்நலம் மூன்றிலும் தேர்ச்சி பெற இடைவிடாத முயற்சியும், பயிற்சியும் அவசியம்.

 

நல்லவர்களின் உபதேசத்தை காது கொடுத்துக் கேட்க வேண்டும். சாதுக்களின் நல்ல வார்த்தைகள் காது வழியாக உண்ணும்  உணவு போன்றது.

 

இறைவன் நமக்குச் செய்யும் அத்தனை செயலும் அருள் தான். சில நேரத்தில் சோதனை குறிக்கிடும்போது, துன்பம்போலத்  தோன்றலாம். ஆனால், அதுவும் கூட அறியாமை தான்.

 

பலர் சேர்ந்து முறையுடும்போது அரசு அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுப்பது போல, பலர் இணைந்து நடத்தும் கூட்டு  பிரார்த்தனைக்கும் உடனடியாகப் பலன் கிடைக்கும்.

 

மனிதனுக்கு பெருமை சேர்ப்பது பட்டமோ, பதவியோ, பணமோ. அழகோ, குலமோ அல்ல. அறிவு ஒன்றே ஒருவருடைய  உயர்வுக்கு வழிவகுக்கும

 

எதனையும் பலமுறை மனதில் சிந்தனை செய்யுங்கள். ஒருவர் போன வழியில் சிந்தில்லாமலேயே பின்பற்றிச் செல்வது மூடத்தனம்.

 

எங்கும் நிறைந்த இரைவனை எளிதாகக் கிடைக்கும் பூவினாலும், நீராலும் நாம் வழிபாடு செய்ய வேண்டும்.அன்பும், ஆசாரமும் இரண்டு கண்கள் போன்றவை.

 

சுகமாக வழும் காலத்திலேயே துக்கத்தையும் பழகிக் கொள்ள வேண்டும்.ஏனென்றால் வாழ்வும் தாழ்வும் மனிதனுக்கு மாறி மாறி வரும்.

 

நாவின் சுவைக்காக ந்ல்லுணவைத் தேடி அலையாதீர்கள். இறையருளால் அன்றாடம் கிடைக்கும் எளிய உணவையும் உண்டு திருப்தி கொள்ளுங்கள்.

 

தேனீயைப் போலவும், எறும்பைப் போலவும் உழைத்து உண்ணுங்கள். அது உங்களுக்கு அமைதியையும், அன்பையும் தரும்.

 

இளமையில் வளையாவிட்டால் முதுமையில் அல்லல்படவேண்டி வரும்.இளமைப்பருவம் உழைப்பதற்கு ஏற்றது. அதன் அருமையை உணர்ந்து பணியாற்றுங்கள்.

 

உடம்பில் எத்தனையோ உறுப்புக்கள் இருந்தாலும் கண் மிக முக்கியமானது.கண்ணுக்கு அணிகலன் தாட்சண்யம்.கண்ணைப் பார்த்தாலே ஒருவனின் குணத்தை அறிந்து கொள்ள்லாம்.

 

தன்னுடைய புத்தகம், பெண், பண்ம் இவை பிறரிடம் கொடுத்தால் போனது போனதுதான்.ஒருவேளை திரும்பி வருவதாயின் புத்தகம் கிழிந்தும், பெண் மாசுபடிந்தும், பணம் அளவு குறைந்தும் தான் வரும்.

 

முதலை வாய்ப்பட்ட மணியை எடுத்து விடலாம்.அலைபாயும் கடலையும் அப்புறமாகத் தாண்டிடலாம்.பாம்பையும் மாலையாகக் கழுத்தில் அணிந்திடலாம். ஆனால்  மூடனைத் திருத்த யாராலும் இயலாது.

 

ஆறு தரம் பூமியை வலம் வருதலும், பதினாராயிரம் தடவை காசியில் குளித்தலும், பலநூறு தடவை சேது ஸ்நானம் செய்தாலும் ஆகிய இவற்ரால் கிடைக்கும் புண்ணியம், தாயை பக்தி பூர்வமாக ஒரு தரம் வணங்கினால் கிடைக்கும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *