2015 ஆம் ஆண்டு மத்திய அரசு “அனைவருக்கும் வீடு” என்ற கொள்கையை கொண்டு அவாஸ் யோஜனா என்ற திட்டத்தை ஆரம்பித்தது. நகர்ப்புற மற்றும் கிராமப்புற மக்கள் அனைவருக்கும் வீடு கட்டித்தருவது என்பது அரசின் குறிக்கோள். இந்த திட்டத்தின் கீழ், கடந்த நான்கு வருடங்களில் 1.53 கோடி வீடுகள் கட்டி தரப்பட்டுள்ளது. அடுத்த மூன்று வருடங்களில் 1.8 கோடி வீடுகள் கட்டித்தர அரசு முடிவெடுத்தள்ளது.
இந்த திட்டத்தின் மொத்த செலவு 2.6 லட்சம் கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. மத்திய அரசு 1.8 லட்சம் கோடி ரூபாய் ஏற்கும், மீதம் மாநில அரசு ஏற்கும். திட்டத்தின் படி ஒரு வீடு கட்டுவதற்கு ஏழை குடும்பங்களுக்கு 1.6 லட்ச ரூபாய் வழங்கப்படும். இந்த முறை பயனாளிகளை அடையாளம் காண சமூக, பொருளாதார மற்றும் சாதி மக்கள் தொகை கணக்கெடுப்பு (SECC) க்கு அப்பால் செல்கிறது அரசு. சிறிய வித்தியாசத்தில் தவறவிட்டோரையும் திட்டத்தின் கீழ் சேர்கிறது.
ஒரு வருடத்திற்கு 6 மில்லியன் வீடுகள் கட்டித்தரப்பட உள்ளது. இந்தியா முழுவதும் மோடி அரசு தொடரவேண்டும் என்று மக்கள் ஜாதி, மதம் என்று அனைத்தையும் தாண்டி வாக்களித்துள்ளனர். உத்தர பிரதேச மாநிலத்தில் சமாஜ்வாதி, பகுஜன் கட்சிகளுக்கு காலம் காலமாக சென்ற ஓட்டுகள், இந்த முறை பா.ஜ.க விற்கு சென்றுள்ளது. இதற்கு முக்கிய காரணம் அடித்தட்டு மக்களுக்கான அடிப்படை வசதிகளை உறுதி செய்த இது போன்ற திட்டங்கள் தான்.