காஷ்மீர் என்றாலே சர்ச்சை என்று ஆகிவிட்டது. சர்ச்சைக்குப் பெயர்போன காஷ்மீரில் மீண்டும் ஒரு சர்ச்சை எழுந்துள்ளது.சட்டசபை கலைக்கப்பட்டது என்பது தான் கவர்னர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி கலைத்துவிட்டார்.
இதற்கு முன்பு கலைக்காமல் இப்பொழுது கலைக்க வேண்டியதின் காரணம் என்ன? தேர்தலுக்கு முன்பு அறிவித்த கூட்டணிகள் எல்லாம் இன்று என்ன ஆனது?
கடந்த சட்டமன்ற தேர்தலில் எதிரும் புதிரும் ஆக இருந்த பாஜக, மக்கள் ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைத்தது ஜீன் 16-ம் தேதி பாஜக ஆதரவை வாபஸ் பெற்றது.இதனால் மெகபூபா பதவியை ராஜினாமா செய்தார்.
அன்று முதல் ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. சட்டசபையை கலைக்கவும் இல்லை, எந்தக் கட்சியும் ஆட்சியமைக்க உரிமை கோரவில்லை.
இந்த நிலையில் திடீரெனப் பாரதிய ஜனதா ஆட்சி அமைக்க ஆர்வம் காட்டியது. இதனால் மற்ற கட்சிகளின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்ப்பட்டது.
பாஜக மற்ற கட்சிகளின் உறுப்பினர்களைத் தன் பக்கம் கொண்டு வர முயற்சி செய்தது.”பழம் தின்று கொட்டை போட்ட பரூக் அப்துல்லா”, “காங்கிரஸ் மெகபூபா” ஒன்று இணைய முடிவு செய்தனர்.
அவர்கள் முடிவு செய்து ஆட்சிகோர உரிமை கோரினர்.வெள்ளம் தலைக்கு மேல் போவதை உணர்ந்த பாஜக உடனடி நடவடிக்கையில் இறங்கியது.அதாவது இறுதியில் சட்டசபை கலைக்கப்பட்டது மொத்தத்தில் ஜனநாயகம் படும்பாடு கேளிக்கூத்தாக உள்ளது.
மக்களிடம் எதிர் பிரச்சாரங்களைச் செய்து மக்களின் உணர்வுகளைத் தூண்டி வெற்றி பெற்ற அனைத்து அரசியல் கட்சிகளும் பதவி என்னும் வெறியில் ஒன்று சேருவதும்.அதை மக்கள் அரசாங்கம் என்று கூறுவதும் வெட்ககேடு. தேர்தலுக்கு முன்பும், பின்பும் எப்பொழுதும் நடக்கும் விவகாரங்களே!
இவர்களுக்குக் கொள்கையாவது, கோட்பாடாவது, கத்திரிக்காவாவது என்று கேட்பது போல் உள்ளது. ஏனென்றால், அனைத்து கட்சிகளும் வெளியில் மட்டும் கொள்கை, கோட்பாடு.ஆனால் உண்மையில் எதுவும் தேவையில்லை. நம்பர்கள் மட்டும் என்பதை தெளிவாக உள்ளார்கள். மானங்கெட்ட பதவிசுகம் என்னவெல்லாம் செய்யச் சொல்கிறது.
ஆனால் ஒருவிதத்தில் நன்மையே நடத்தது. ஏனென்றால் குதிரைபேரம் நடக்க வாய்ப்பில்லை. மீண்டும் தேர்தல் நடக்கும்பொழுது மக்கள் தெளிவான முடிவுகளைத் தனது வாக்காகப் பதிவு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மொத்தத்தில் அரசியல் கட்சிகளுக்கு நல்லப் பாடம், பொதுமக்களுக்கு மகிழ்ச்சி.