கால்பந்தில் உயர்ந்த விருதாகக் கருதப்படும் “தங்க பந்து விருது” இந்த வருடம் லுகா மாட்ரிச் தட்டி சென்றார்.
இவர் குரேஷிய அணியின் கேப்டன் ஆவார். இவரது தலைமையிலான அணி உலககோப்பையில் இரண்டாவது இடம் பிடித்தது. இவர் உலகின் தலைசிறந்த நடுகள வீரர் ஆவார்.
இவர் 753 புள்ளிகள் பெற்று நட்சத்திர வீரர்களான மெஸ்சி, ரொனால்டோ போன்றவர்களைப் பின்னுக்குத் தள்ளி வென்றார்.
ஆனால் இவர் அடித்த கோல்கள் மூன்று கோல்கள் மட்டுமே.ரொனால்டோ 154 கோல்களும், மெஸ்சி 148 கோல்களும் இந்தச் சீசனில் அடித்துள்ளனர்.
நடுநிலைவாதிகள் அவரைத் தேர்வுசெய்ததைக் கொண்டாடி வருகிறார்கள். ஆனால் நட்சத்திர வீரர்களின் ரசிகர்கள் கடுமையான எதிர்ப்பைச் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகிறார்கள்.