நடிகர் ஆர்யா மற்றும் சாய்ஷா கடந்த வருடம் கஜினிகாந்த என்ற தமிழ் படத்தில் இணைந்து நடித்தனர். அப்போது இருவருக்கும் காதல் ஏற்பட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தன. ஆனால் இது குறித்து இரு தரப்பினரும் அப்போது பதில் ஏதும் கூறவில்லை.
இந்நிலையில் பெற்றோர் மற்றும் குடும்பத்தினரின் ஆசீர்வாதத்துடன் இந்த மார்ச்சில் தாங்கள் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக நடிகர் ஆர்யா தன் டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளார். மேலும் ஆர்யா தன் காதலர் தின வாழ்த்துகளையும் சாய்ஷாவுக்கு தெரிவித்து உள்ளார். சாய்ஷாவும் தன் டிவிட்டர் பக்கத்தில் காதலர் தின வாழ்த்துகளை ஆர்யாவுக்கு தெரிவித்து உள்ளார்.