காதலர் தினம் உருவான விதம்

இன்று உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட்டு வரும் வேளையில் காதலர் தினம் உருவான வரலாற்றை இந்த பதிவில் காணலாம்.ரோமானிய அரசன் கிளாடியுஸ் மிமி ஆட்சிக் காலத்தில் ரோமாபுரி நாட்டில் இனி யாரும் திருமணம் செய்து கொள்ளக்கூடாது எனவும், ஏற்கனவே நிச்சயிக்கபட்ட திருமணங்களை ரத்து செய்ய வேண்டும் எனவும் ஒரு அதிரடி உத்தரவை விட்டுள்ளார்.

இந்நிலையில் அந்நாட்டு பாதிரியார் வாலண்டைன் அரசனின் அறிவிப்பை மீறி இரகசியமாக அனைவரும் திருமணங்களை நடத்தி வைத்தார். இதனையறிந்த மன்னன் வால்ண்டைனை கைது செய்ததோடு, மரணதண்டனையை நிறைவேற்ற நாளும் நிர்ணயிக்கப்பட்டது. அதன் பின் வாலண்டைன் கல்லால் அடிக்கப்பட்டு சித்தரவை செய்யப்பட்டு தலை துண்டிக்கப்பட்டு  கொல்லப்பட்டார். அந்தநாள் கி.பி.270, பிப்ரவரி 14ம் நாள். இந்த நாளை வாலண்டைன் தினம் காதலர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *