அமெரிக்காவில் ஜார்ஜியா என்னுமிடத்தில் கட்டப்பட்ட பாலிதீன் பைக்குள் பிறந்த குழந்தை ஒன்று இருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
ஜார்ஜியாவின் காட்டுப் பகுதிக்குள் குழந்தை அழும் சத்தம் கேட்பதாக காவல்துறைக்கு தகவல் வந்துள்ளது. அப்பகுதிக்கு வந்த காவல்துறையினர் குழந்தை அழும் சத்தத்தை வைத்து கண்டுபிடித்துள்ளனர்.
குழந்தை கட்டப்பட்ட பாலிதீன் பைக்குள் வைக்கப்பட்டிருந்தை கண்டுபிடிக்கும் போது அதை மற்றொரு காவல்துறை அதிகாரி வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ காட்சியினை காவல்துறையின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
கண்டுபிடிக்கப்பட்ட குழந்தைக்கு ‘இந்தியா’ என்று காவல்துறையினர் பெயரிட்டுள்ளனர். காட்டில் கண்டெடுக்கப்பட்ட குழந்தை இந்தியா நலமாக உள்ளதாகவும் அக்குழந்தையின் தாய் யாரென கண்டுபிடிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.