காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தர். பிரதமர் நரேந்திர மோடி கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை ஊழலுக்கு எதிராக போராடி வருவதாக கூறி வருகிறார்.
ஆனால் அவரை ஊழல்வாதி என்று மக்கள் நினைக்கத் தொடங்கியுள்ளனர். இது மாற்றத்திற்கான தருணம். ஒருங்கிணைந்த எதிர்க்கட்சிகள் முன்பு பிரதமர் மோடியால் போரிட முடியாது.
இந்த மூன்று மாநிலங்களிலும் நல்லாட்சி வழங்குவோம் மூன்று மாநில தேர்தல் வெற்றி தொழிலாளர்கள், விவசாயிகள், வணிகர்கள் , சாமானிய மக்களுக்கு கிடைத்த வெற்றியாகும் என்று ராகுல் காந்தி பேட்டி அளித்தார்.