2019 – ஆம் ஆண்டுக்கான மக்களவை தேர்தல் ஆனது வரும் மே மாதத்தில் நடைபெறவுள்ளது. இதனால் நாட்டில் உள்ள அனைத்து பிரதான கட்சிகளும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டமானது மார்ச் 12 – ஆம் தேதி அகமதாபாத்தில் ராகுல் காந்தி அவர்களின் தலைமையில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
