
கவி சாம்ராஜ்யம் நா முத்துக்குமார்
கவிஞர் நா முத்துக்குமார் மறைந்து கிட்டத்தட்ட மூன்றாண்டுகள் கடந்துவிட்டன.
கவிஞர் கண்ணதாசனின் பாடல்கள்தான் நினைவுக்கு வருகிறது
மனிதன் என்பவன் தெய்வமாகலாம்
மனிதன் என்பவன் தெய்வமாகலாம்
மனிதன் என்பவன் தெய்வமாகலாம்
மனிதன் என்பவன் தெய்வமாகலாம்
வாரி வாரி வழங்கும் போது வள்ளல் ஆகலாம்
வாழை போல தன்னைத் தந்து தியாகி ஆகலாம்
உறுதியோடு மெழுகு போல ஒளியை வீசலாம்
மனிதன் என்பவன் தெய்வமாகலாம் தெய்வமாகலாம்
ஊருக்கு என்று வாழ்ந்த நெஞ்சம் சிலைகள் ஆகலாம்
உறவுக்கென்று விரிந்த உள்ளம் மலர்கள் ஆகலாம்
ஊருக்கு என்று வாழ்ந்த நெஞ்சம் சிலைகள் ஆகலாம்
உறவுக்கென்று விரிந்த உள்ளம் மலர்கள் ஆகலாம்
யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்
மனம் மனம் அது கோவிலாகலாம்
மனிதன் என்பவன் தெய்வமாகலாம்
மனிதன் என்பவன் தெய்வமாகலாம்
மனிதன் என்பவன் தெய்வமாகலாம்
மனமிருந்தால் பறவைக்கூட்டில் மான்கள் வாழலாம்
வழியிருந்தால் கடுகுக்குள்ளே மலையைக் காணலாம்
மனமிருந்தால் பறவைக்கூட்டில் மான்கள் வாழலாம்
வழியிருந்தால் கடுகுக்குள்ளே மலையைக் காணலாம்
துணிந்து விட்டால் தலையில் எந்த சுமையும் தாங்கலாம்
குணம் குணம் அது கோவிலாகலாம்
மனிதன் என்பவன் தெய்வமாகலாம்
வாரி வாரி வழங்கும் போது வள்ளல் ஆகலாம்
வாழை போல தன்னைத் தந்து தியாகி ஆகலாம்
உறுதியோடு மெழுகு போல ஒளியை வீசலாம்
மனிதன் என்பவன் தெய்வமாகலாம் தெய்வமாகலாம்
காலம் கொடுத்த கவி சாம்ராஜ்யம் நா.முத்துக்குமார். கிட்டத்தட்ட தமிழர்களின் வாழ்வை தன் கவிதைகளால் நிரப்பியவர் அவர். அவரது பாடல்கள் பலருக்கு வாழ்வு குறித்த நம்பிக்கை விதைகள் தெளித்தன; வரிகள் பலருக்கு வாழ்க்கை கொடுத்தன; பலரைக் கண்ணீர் உருகவைத்தன. தமிழ் திரையிசை ரசிகர்களின் விருப்பத்திற்குரியவனாக இருந்த அந்தக் கவிஞன் தன் ஆயுளில் பாதியைக் கழிப்பதற்குள்ளாகவே மறைந்தான்.
மிக இளம் வயதில் மரணமெனும் வேட்டைக்குச் சிக்கிக்கொண்டாலும், வயது வித்தியாசமின்றி வகைமை பேதமின்றி எல்லாத் தரப்பினருக்குமான சொற்களைக் கையளித்துச் சென்றுள்ளார் முத்துக்குமார். எல்லா வகை உணர்வுகளோடும் நம் நிகழ் வாழ்வைக் கடத்தத் தேவையான பாடல்கள் அவரிடத்தில் இருக்கின்றன. ஆற்றாமையை, துயரத்தை, பிரிவை, ஏகாந்தத்தை, இன்பத்தை, கூடலை, காதலை, கொண்டாட்டத்தைப் பாடுகிற பாடல்கள் அவரது பேனாவிலிருந்து வடிந்தபடியிருக்கின்றன.
ஒரு பத்து – ஐம்பது பாடல்களைப் பட்டியலிட்டு இதெல்லாம் சிறந்ததென பட்டியலிடக்கூடியதா முத்துக்குமாரின் வரிகள்? மகளுக்கான அன்போடு ஒப்புமைப்படுத்த வானத்து நிலவைத் தன் பக்கத்தில் வைத்து வார்த்தைகளால் அளந்த கவிஞனல்லவா?
அசாத்தியங்களை எந்த அலட்டலும் இல்லாமல் சாத்தியமாக்கிக் கொண்டிருந்தது அந்தக் கவிஞனின் விரல்கள். அந்த புன்னகை முகங்கொண்ட கவிஞன்தான் அத்தனை ரசித்து ரசித்துப் பெண்ணைப் பாடினான்.
தமிழும், சொல்லும், அணியும் அவரது பேனாவின் மைக்கு நடனமாடின .
கவிதைகளிலும், உரைநடையிலும் நா.முத்துக்குமார் நிகழ்த்தியது அசுரப் பாய்ச்சல். கவிஞன் உரைநடை எழுதுவதில் இருக்கும் நற்பேறுகள் அத்தனையையும் நா.மு-வை வைத்துக் கணக்கிட்டுக் கொள்ளலாம்
இப்போதும் அவர் வரிகளோடு தமிழ் சினிமா பாடல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அது ஒருநாளும் எழுதாமல் உறங்கவில்லை என்கிற அவரது அசாத்திய உழைப்பைச் சொல்வது மட்டுமல்ல; நமக்கான கூடுதல் பலம் ஆகும்.
மனிதன் என்பவன் தெய்வமாகலாம் தெய்வமாகலாம்