கவலையில் தேசிய மகளிர் ஆணையம்?

பொள்ளாச்சியில்  200-க்கும்  மேற்பட்ட  இளம்  பெண்களை  ஏமாற்றி பாலியல்  வன்கொடுமை  செய்த அரக்கர்களை காவல்துறையினர்  குண்டர்  சட்டத்தில்  கைது  செய்தனர்.  அதுமட்டுமின்றி, தற்போது  இந்த  வழக்கை  சிபிசிஐடி  இடம்  இருந்து  சிபிஐக்கு  மாற்ற தமிழக  அரசு  பரிந்துரை  செய்துள்ளது. இந்நிலையில்,  இந்த  வன்கொடுமை செய்த  குற்றவாளிக்களுக்கு எதிராக இதுவரை  என்ன  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது  என  தமிழக  டிஜிபிக்கு  தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ்  அனுப்பியுள்ளது. நாட்டில் பெண்களுக்கு ஏற்படும் இவ்வகையான பாதிப்புகள், பாதுகாப்பற்ற சூழல் ஆகியவை மிகவும்  கவலை  அடைய செய்வதாக  தேசிய  மகளிர்  ஆணையம்  தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *