இசைஞானி இளையராஜாவின் 75வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நடத்திய இளையராஜா 75 எனும் நிகழ்ச்சி நேற்று இரவுடன் முடிவுற்றது.இரண்டு நாட்கள் நடந்த இந்த நிகழ்ச்சியில் முதல் நாளில் நடிகர் நடிகைகள் இளையராஜாவின் பாடல்களுக்கு ஆடினர். பாடகர்கள் இளையராஜாவின் பாடல்களை மேடையில் பாடினர்.
நேற்று இளையராஜா தனது பாடல்களை மேடையில் பாடினார். ரஜினி, கமல், விக்ரம், மணி ரத்னம், விஜய் சேதுபதி, சுருதி ஹாசன், குஷ்பு, சுஹாசினி, விஷால் உள்ளிட்ட பல சினிமா பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்றனர்.