மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் சிலையை நேற்று சோனியா காந்தி அவர்கள் திறந்து வைத்தார். இன்நிகழ்ச்சி அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கட்சித் தலைவர்கள், முதல்வர்கள், நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டு சிலை திறப்பு விழா நிகழ்ச்சியை நடத்தி வைத்தனர்.
இன்நிகழ்ச்சி முடிந்ததும் சோனியா காந்தி, ராகுல்காந்தி ஆகியோர் மெரினா கடற்கரைக்கு சென்று கலைஞர் கருணாநிதியின் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர், பின் அண்ணா நினைவிடத்திற்கும் சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
பின்னர் அங்கிருந்து புறப்பட்ட சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் ராயப்பேட்டை ஓ.எம்.சி.ஏ திடலில் நடைபெற்ற திறப்பு விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். அந்த கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் மு க ஸ்டாலின் அவர்கள் ராகுல் காந்தியை பிரதமராக முன்மொழிகிறேன் என்றார்.
பின் அவர் கூறியது பிரதமர் நரேந்திர மோடி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியாக நடந்து கொள்வதற்கு பதிலாக தன்னை ஒரு மன்னராக கருதிக் கொண்டு செயல்பட்டு வருகிறார். அதனால் தான் எதிர்க்கட்சிகள் அனைவரும் ஒன்றிணைந்து மோடியை தோற்கடிக்க வேண்டும் என்று முயற்சிக்கிறோம் என்றார். பின்னர் அவர் கூறியது கலைஞரின் சிலை திறப்பு நிகழ்ச்சியில் தலைவர் கருணாநிதியின் மகளாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான சோனியா காந்தி வந்து சிலையை திறந்து வைத்து இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.
திமுக தலைவர் மு க ஸ்டாலின் இந்த நாள் எனது அரசியல் வாழ்விலேயே மிக முக்கியமான நாள் என்று முக ஸ்டாலின் அவர்கள் தெரிவித்தார். பின்பு கலைஞர் மறையவில்லை என்ற உணர்வுதான் என் உயிரில் ஓடிக்கொண்டிருக்கிறது என்று மு.க.ஸ்டாலின் அவர்கள் தெரிவித்தார்.