கலிபோர்னியாவில் ஆப்பிள் பழத்தின் எடையளவே பிறந்த குழந்தை

கலிபோர்னியா மருத்துவமனையில் வெறும் 245 கிராம் (8.6அவுன்ஸ்) எடைகொண்ட பெண் குழந்தை பிறந்துள்ளது. கிட்டத்தட்ட இந்தக் குழந்தையின் எடை என்பது பெரிய சைஸ் ஆப்பிளின் எடையளவு ஆகும். உலகிலேயே மிகச் சிறிய குழந்தை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனையில் உள்ள செவிலியர்கள் குழந்தைக்கு சபே என்று பட்டபெயர் வைத்துள்ளனர்.

குழந்தை பிறந்த சிறிது நேரத்தில் மருத்துவர்கள் ஒருமணிநேரம் மட்டுமே இருப்பாள் அதன் பின் குழந்தை இறந்து விடும் என்று தெரிவித்தனர்.

ஒரு மணி நேரம் இரண்டு மணிநேரமாக மாறியது. அதன்பின் ஒரு வாரமாக மாறிவிட்டது என்று மருத்துவமனை வெளியிட்ட வீடியோவில் குழந்தையின் அம்மா தெரிவித்துள்ளார்.

டிசம்பரில் அறுவை சிகிச்சை மூலமாகவே குழந்தை எடுக்கப்பட்டது.23 வாரங்கள் 3 நாட்கள் கர்ப்ப பையில் இந்த குழந்தை இருந்துள்ளது. வழக்கமான கர்ப்ப காலம் என்பது 40 வாரங்கள் நீடிக்கும்.

தீவிர சிகிச்சை பிரிவில் ஏறக்குறைய 5 மாதங்கள் வைத்து பார்த்ததில் தற்போது குழந்தையின் எடை 2.2 கிலோகிராம் எடையாக உள்ளது.

குழந்தை அற்புதமானவள் வாழ்வதற்கான போராட்ட குணம் அவளுக்கு இருந்தது என்று மருத்துவமனை செவிலியர் பெருமையுடன் கூறுகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *