கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் முதல்வர் சித்தராமையா கர்நாடகத்தில் வருகின்ற டிசம்பர் இருபத்திரண்டாம் தேதி அமைச்சரவை விரிவாக்கம் செய்வது உறுதி என்றார்.
முதல்வர் சித்தராமையாவிடம் இதுகுறித்து கேட்டபோது பல்வேறு காரணங்களால் அமைச்சரவை விரிவாக்கம் தள்ளிப்போகிறது. அதனால் வருகின்ற டிசம்பர் இருபத்திரண்டாம் தேதி அமைச்சரவை விரிவாக்கம் உறுதியாகச் செய்வோம். இதற்காகக் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தங்கள் குறைகளைத் தெரிவித்ததால் சரி செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று சித்தராமையா கூறினார்.
இதையடுத்துக் கர்நாடகத்தைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் அனைவரும் சேர்ந்து அமைச்சரவை உருவாக்கத்தின்போது அதிக முக்கியத்துவம் தர வேண்டும் என்று சித்தராமையாவிடம் வலியுறுத்தினார்கள். இதற்கு முதல்வர் சித்தராமையா அனைத்தையும் ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட அமைச்சர் பதவிகளில் இன்னும் 6 பேருக்கு வாய்ப்பு உள்ள நிலையில் கட்சி மேலிடம் மிகவும் சிக்கலில் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இந்தக் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் அமைச்சர்கள் பலர் கலந்து கொள்ளவில்லை என்றும் கர்நாடகத்தைச் சேர்ந்த 40 எம்எல்ஏக்கள் 10 பேருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்றும் வட கர்நாடகத்தைச் சேர்ந்த 40 எம்எல்ஏக்களில் ஐந்து பேருக்கு மட்டும் காங்கிரஸ் கட்சி சார்பில் வாய்ப்புள்ளது என்றும் மீதமுள்ள ஆறு இடங்களுக்குக் கர்நாடகத்தைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று வட கர்நாடகா காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இது காங்கிரஸ் மேலிடத்திற்குப் பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.