
க/பெ ரணசிங்கம்” வித்தியாசமான தலைப்பில் விஜய்சேதுபதி
ஒவ்வெரு ஆண்டும் அதிக படங்களை கொடுத்து அமர்களப்படுத்திவரும் முன்னணி நடிகர் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில், சிந்துபாத், கடைசி விவசாயி, சங்கத் தமிழன், லாபம், மாமனிதன், இடம் பெருள் ஏவல், ஆகிய படங்கள் வெளிவர இருக்கிறது.
இந்நிலையில் கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தில் விஜய் சேதுபதி ஒப்பந்தமாகி இருக்கிறார்.
இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார் என்றும் இப்படத்தை பி.விருமாண்டி இயக்குகிறார் என்றும் இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.
இப்படத்திற்கு க/பெ ரணசிங்கம் என படக்குழு வித்யாசமான தலைப்பை வைத்துள்ளனர். இந்த தலைப்பு தற்போது அதிகம் கவனம் பெற்று வருகிறது. இப்படத்தில் இணையும் அடுத்தடுத்த பிரபலங்கள் குறித்து விரைவில் வெளியிடப்படும் என்று தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருக்கிறது.