கன்னியாகுமரியில் நடந்த அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அதில் பாதுகாப்புத்துறை அமைச்சர், அபிநந்தன் ஆகியோர் தமிழர்கள் என்பதில் பெருமை. ஹைதராபாத், ஜெய்ப்பூர், பெங்களூர், மும்பை என பல இடங்களில் முன்பு வெடிகுண்டுகள் வெடித்தன. தீவிரவாதிகளுக்கு எதிராக மக்கள் எதிர்பார்த்த எதையும் முந்தைய அரசு நிறைவேற்றவில்லை.
புல்வாமாவில் தாக்குதல் நடந்ததும் நமது ராணுவம் எப்படி பதிலடி கொடுத்தது என்பதை பாருங்கள். துணிச்சல் மிகுந்த ராணுவத்தினருக்கு எனது வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன். இன்றைய கால கட்டத்தில், நமது ராணுவத்திற்கு முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது.
இது புது இந்தியா, தீவிரவாதிகளுக்கு வட்டியும் முதலுமாக திருப்பிக் கொடுக்கப்படும். துரதிருஷ்டவசமாக சிலர் மோடி வெறுப்பை நாட்டுக்கு எதிரான வெறுப்பாக காட்டுகிறார்கள். நாடு முழுக்க ராணுவத்தை நம்புகிறது, சிலர் சந்தேகிக்கிறார்கள் உலகமே நமது யுத்தத்தை பாராட்டுகிறது, சில கட்சிகள் சந்தேகிக்கின்றன. ஊழலுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
ஊழல் செய்த அனைவரும் பதில் சொல்ல வேண்டிய கால கட்டம் வந்துவிட்டது . ஊழல்வாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதை போல வரி செலுத்துவோருக்கு சலுகை செய்கிறோம். தொழில் செய்வதற்கு உகந்த நாடுகள் பட்டியலில் இந்தியா முன்னேறி 77வது இடத்திற்கு வந்துள்ளது. ராஜாஜியின் பொருளாதார கொள்கைகளை செயல்படுத்துவதில் உறுதியாக உள்ளோம் என பிரதமர் மோடி கூறியுள்ளார்