பொள்ளாச்சி பலாத்கார குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கக் கோரி நேற்று திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. போராட்டம் நடத்திய கனிமொழி உள்பட 600 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்ட விரோதமாக கூடுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது. மேலும் இப்போராட்டத்தில் கனிமொழி உள்பட பலர் கைது செய்யப்பட்டனர்.
