ட்ரம்ப்பை பதவியில் இருந்து நீக்குவதற்காக கண்டனத் தீர்மானத்திற்கு ஆதரவாக 229 உறுப்பினர்களும் எதிராக 194 உறுப்பினர்களும் வாக்களித்துள்ளனர். எனவே கண்டனத் தீர்மானம் நிறைவேறியது. கண்டனத் தீர்மானம் செனட் சபையிலும் நிறைவேறினால் மட்டுமே, அதிபர் டிரம்பை பதவியில் இருந்து நீக்க முடியும். ஆனால் 100 இடங்களைக் கொண்ட செனட்டில் டிரம்பின் குடியரசுக் கட்சிக்கு 53 எம்.பி.க்களுடன் பெரும்பான்மை உள்ளதால், அவரது பதவி தப்ப வாய்ப்புகள் அதிகம்.
