கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன. உலகம் முழுவதிலிருந்தும் தன்னார்வ தொண்டர்களும், தொண்டு நிறுவனங்களும் உதவிகளைச் செய்து வருகிறார்கள்.
பெரும்பாலான நிவாரணப்பொருட்கள் சரக்கு ரெயில்கள் மூலமே வருகின்றன. எனவே அதற்குக் கட்டண சலுகை கேட்டுத் தமிழக அரசு மத்திய அரசுக்கு விண்ணப்பித்திருந்தது.
இதை ஏற்றுக்கொண்ட மத்திய அரசு கட்டண சலுகையை அறிவித்து உள்ளது.