கடுமையாக விமர்சிக்கும் டிடிவி தினகரன் அவர்கள்

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொது செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் மக்கள் சந்திப்பு பயணம் என்ற பெயரில் பயணம் மேற்கொண்டு தமிழ்நாடு முழுவதும் மக்களை சந்தித்து பேசி வருகிறார். அதில் நேற்று நெய்வேலி தொகுதியில் பேசிய டிடிவி தினகரன் அவர்கள் பாமகவின் அன்புமணி மற்றும் ராமதாஸ் ஆகியோர் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு வரை அதிமுகவை கடுமையாக எதிர்த்தனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் திருவுருவ படத்தை சட்டமன்றத்தில் வைப்பதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தவர்கள் , அம்மா ஜெயலலிதா அவர்களுக்கு நினைவிடம் அமைப்பதற்கு எதிராக நீதி மன்றத்தை நாடியவர்கள். அவர்களுடன் அதிமுக முரண்பட்ட கூட்டணியை வைத்து உள்ளது என கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார். மேலும் அவர் திமுக காங்கிரஸ் கூட்டணியை சமூக விரோத கூட்டணி எனவும் விமர்சனம் செய்து உள்ளார்.

பிற கட்சிகள் எல்லாம் கூட்டணி குறித்து விவாதித்து கொண்டு இருக்க டிடிவி தினகரன் அவர்கள் தனது ஸ்டைலில் தன் கட்சி மாவட்ட நிர்வாகிகளுக்கு ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள், பத்திரிக்கையாளர்களை கொண்டு சிறப்பு வகுப்புகள் நடத்தி வருகிறார். அதில் வாக்குகள் சேகரிக்கும் முறை, வாக்காளர்களை அணுகும் முறை, எதிர் கட்சிகளின் விமர்சனங்களுக்கு நாகரிகமாக பதில் அளிக்கும் முறை குறித்தும் கட்சி நிர்வாகிகளுக்கு கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *