5 மாநில தேர்தலில் 3 மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியை வென்றது. இதில் மத்திய பிரதேசத்தில் யாரை முதல்வராக தேர்வு செய்வது என்ற கூட்டம் நேற்று இரவு வரை நடந்தது.
இதில் மத்திய பிரதேச முதல்வராக கமல்நாத் தேர்வு செய்யப்பட்டார். அப்போது அவர் முதன்முறையாக டி.வி சேனலுக்கு பேட்டி அளித்தர். அவர் கூறியது கடந்த நவம்பரில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரத்தின் போது கூறியது காங்கிரஸ் ஆட்சி அமைத்தவுடன் 10 நாட்களில் விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்யப்படும் என கூறினார்.
அதன்படி எனது தலைமையில் ஆட்சி அமைத்தவுடன் முதல் பணியாக விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய உத்தரவிட வேண்டும் என்று கமல்நாத் கூறினார்.