கஞ்சனூர் அக்கினீஸ்வரர் கோயில் (சுக்கிரன் திருத்தலம்)

2018-2019 -கான குருபெயர்ச்சி பலன்கள் பார்க்க

கஞ்சனூர் அக்கினீஸ்வரர் கோயில் அப்பர் பாடல் பெற்ற சிவத்தலமாகும்.

இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 36வது தலம் ஆகும். இக்கோயில் மதுரை ஆதினதிற்குட்பட்ட கோயிலாகும்

இப்புனிதக்கோவில் சூரியனார் கோவிலிக்கு அருகே இருக்கிறது. இது நவக்கிரக கோவிலாகவும்/ஸ்தலமாகவும் இருக்கிறது. தெற்கு கதவு வழியாக பக்தர்கள் இந்த கோவிலுக்குள் நுழைய வேண்டும்.

கஞ்சமாற நாயனார் அவதரித்த தலமெனப்படுகிறது. பிரமனுக்குத் திருமணக் காட்சியளித்த தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).பலாச வனம் என்றும்,அக்கினித்தலம் என்றும் பிரம்மபுரி என்றும் அழைக்கப் படுகிறது. தேவாரம், பெரிய புராணம், சோழ மண்டல சதகம் ஆகிய நூல்களில் இத்தலம் கஞ்சனூர் என்றே வழங்கப்பட்டுள்ளது.

சிவபெருமானே சுக்கிரனாகக் காட்சி அளிக்கிறார் என்பதால் சுக்கிரனுக்காக தனி சன்னிதி இல்லை.

 • இறைவன்: அக்னீச்வரர்
 • அம்பாள் : கற்பகாம்பாள்
 • விருட்சம்: புரச மரம்
 • தீர்த்தம்: அக்னி தீர்த்தம்
 • பதிகம்: அப்பர்
 • நவக் கிரகத் தலம்: சுக்ரன்

இக்கோயிலில் இருக்கும் முக்தி மண்டபம் என்றழைக்கப்படும். நடராஜ சபையில் நடராஜர் மற்றும் சிவகாமி ஆகிய தெய்வங்களின் திரு உருவச் சிலைகள் அமைந்துள்ளன.சிவபெருமான், பராசர முனிவருக்கு முக்தி தாண்டவம் ஆடிக் காட்சி அளித்த திருத்தலம் இது. நவக்கிரகத் தலங்களில்,இது சுக்கிரனுடைய தலமாகும்.

 • சுக்கிரனின் நிறம் வெண்மை.
 • வாகனம்: முதலை
 • தான்யம்: மொச்சை
 • உணவு; மொச்சைப் பொடி கலந்த சாதம்
 • வஸ்திரம் (துணி) : வெள்ளைத் துணி
 • மலர்: வெண்தாமரை
 • இரத்தினம்: வைரம்

மனித வாழ்வில் மனநிறைவோடு வாழ மிகவும் அத்தியாவசியமானகிரகம் சுக்கிரன். இந்தக் கிரகம் ஒருவரின் ஜாதகத்தில் நீசமடைந்து பலம்குன்றி இருந்தாலோ அல்லது சுக்கிரன் இருக்கும் இடத்தைப் பொறுத்துஆதிபத்ய தோஷம் பெற்று இருந்தலோ, அவற்றுக்கெல்லாம் பரிகாரத்தலமாக அமைந்துள்ளது திருகஞ்சனூர் என்ற இத்தலம். சுக்கிரனுக்குவெண் பட்டாடை சாற்றி,வெள்ளைத் தாமரை மலர்களால் அர்ச்சித்து,நெய் தீபம் ஏற்றி வழிபட்டு சுக்கிர தோஷத்தில் இருந்து விடுபடலாம்.

இந்த ஆலயம், காலை 7 மணி முதல் 11 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

தலவரலாறு:
 • அமுதம் பெறுவதில் தேவர்கள் செய்த செயல் கண்டு கோபமடைந்த அசுரர்கள் தங்கள் குலகுரு சுக்கிராச்சாரியாரிடம் முறையிட, அவர் தேவர்களை நாடு நகரம் இழந்து பூலோகம் சென்று துன்புற சாபம் தந்தார்.சாபம் பெற்ற தேவர்கள் வியாச முனிவரிடம் முறையிட, அவர் உத்திரவாஹினி என வழிபடப்படும் வடகாவிரியில் நீராடி ஸ்ரீகற்பகாம்பிகை சமேத ஸ்ரீ அக்னீஸ்வரரை வழிபட சுக்கிரன் சாபம் நீங்கும் என்று வழிகாட்டினார்.தேவர்களும் அவ்வாறே வழிபட்டு சாபவிமோசனமும், சிவபெருமான் தரிசனமும் பெற்றனர்.
 • மதுராபுரி மன்னர் கம்சராஜன் என்ற மன்னனும் இங்கு தனது பாவம் நீங்க வழிபட்டார்.
 • அக்னீஸ்வரன் ஒருமுறை பிரம்மதேவர் செய்த யாகத்தில் சேர்க்கப்பட்ட ஆகுதிகளைத் தேவர்களிடம் தராமல், தானே எடுத்துக்கொண்டதால் பெற்ற சாபத்தால் ’பாண்டு ரோகம்’ நோய் அவரைப் பற்றியது. அதிலிருந்து விடுபட அக்னிபகவான் பிரம்மதேவன் ஆலோசனைப்படி இங்கு வந்து தீர்த்தம் உருவாக்கி, இத்தல இறைவனை வழிபட்டு நோய் தீர்ந்தார். இதனால் இத்தல இறைவனுக்கு அக்னீஸ்வரர் என்ற திருப்பெயரும், அவர் உருவாக்கிய தீர்த்தத்திற்கு அக்னி தீர்த்தம் என்ற பெயரும் ஏற்பட்டது.
 • அக்னிதேவனின் நோயால் ஆரம்பித்த யாகம் தடைபட்டதால், படைப்புத் தொழிலைத் தொடங்க முடியாத பிரம்மதேவரும் இங்கு வந்து சிவபெருமானை நோக்கித் தவமிருந்து அவர் அருளால் படைப்புத் தொழிலைத் தொடங்கினார். இதனால் இத்தலத்தில் ஓடும் காவிரி நதிக்கு ’பிரம்ம தீர்த்தம்’ என்ற பெயர் ஏற்பட்டது.
 • மாண்டவ்ய மகரிஷியின் புத்திரர்களின் ’மாத்ருஹத்தி’ தோஷத்தை போக்கிய தலம்
 • 63 நாயன்மார்களில் ஒருவரான மானக்கஞ்சாற நாயனார் அவதரித்து வழிபட்ட சிறப்பினை உடைய தலம்.
 • கொடிமரத்தை அடுத்துள்ள கல் நந்தி புல்லைத் தின்ற பெருமையுடைய தலம்.

2018-2019 -கான குருபெயர்ச்சி பலன்கள் பார்க்க

தலவிருட்ச பெருமை:

இத்தலத்து தலவிருட்சத்தை ஒரு மண்டல காலம் பதினாறு முறை சுற்றி வந்து வழிபட கடன் தொல்லை தீரும் என்பது தொன்நம்பிக்கையாகும்.

கிழக்கு நோக்கிய 5 நிலை ராஜகோபுரத்துடன் இவ்வாலயம் காட்சி அளிக்கிறது. கோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்து பிராகார வலம் வந்து உள் மண்டப வாயிலை அடையலாம். மண்டப வாயிலின் இடதுபுறம் விநாயகரும், வலதுபுறம் விசுவநாதர் சந்நிதியும் உள்ளன. அதையடுத்து அம்பாள் சந்நிதி உள்ளது. உள்வாயிலைத் தாண்டி சுவாமி சந்நிதிக்குச் செல்லும்போது, இடதுபுறம் வெளவால் நெத்தி மண்டபத்தில் விநாயகர், மயூர சுப்பிரமணியர், மகாலட்சுமி சந்நிதிகள் உள்ளன. தலமரம் புரசு (பலாசு) உள்ளது. இதன் கீழ் அக்னீஸ்வரர் லிங்கம் தரிசனம். அடுத்து மானக்கஞ்சாறர், கலிக்காமர் திருவுருவங்கள் உள்ளன. பக்கத்தில் சுரைக்காய்ப் பக்தர் என்ற அடியார் மனைவியுடன் காட்சி தருகிறார்.

மகா மண்டபத்தில் பைரவர், சூரியன், சனி பகவான், சந்திரன், நவக்கிரகச் சந்நிதி, நால்வர் சந்நிதிகள் உள்ளன. இங்குள்ள நடராச சபை தரிசிக்கத்தக்கது. நடராசர் மூலத்திருமேனியில், சிவகாமியுடன் சிலாரூபமாக இருப்பது தனிச் சிறப்பும் அழகும் வாய்ந்தது. இம்மூர்த்தியே பராசரருக்குத் தாண்டவக் காட்சியளித்தவர். இத்தாண்டவம் முத்தித் தாண்டவம் எனப்படுகிறது. இம்மண்டபத்துக்கும் முக்தி மண்டபம் என்று பெயர். கருவறையில் மூலவர் அக்னீஸ்வரர் கிழக்கு நோக்கிய சந்நிதியில் சுயம்பு மூர்த்தியாக உயர்ந்த பாணத்துடன் காட்சி தருகிறார். மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றாலும் சிறப்பு பெற்ற இக்கோவில் இறைவனை திருமால், பிரம்மன், சந்திரன் ஆகியோர் வணங்கி பேறு பெற்றதாக வரலாறு உள்ளது. இறைவன், பிரம்ம தேவருக்கு திருமணக் கோலம் காட்டி அருளியதால், இறைவன் சந்நிதிக்கு வலதுபுறம் தனி சந்நிதியில் இறைவி காட்சி அளிக்கிறார்..

நாயனார்கள் வாழ்வில்:
 • மானக்கஞ்சார நாயனார் அவதரித்த தலம்
 • கலிக்காம நாயனார் திருமணம் நடைபெற்ற தலம்
 • கஞ்சனூரிலும் அதை சுற்றிலும் இருக்கும் சுற்றுலாத் தலங்கள் கஞ்சனூர் ஒரு நவக்கிரக ஸ்தலம். அதோடு திருநல்லார் (சனீஸ்வரர்), கஞ்சனூர் (வெள்ளி அல்லது சுக்ர தேவன்), திருவேங்கடு (புதன் அல்லது புதனீஸ்வரர்), சூரியனார் கோவில் (சூரியன் அல்லது சூரிய தேவன்), திங்களூர் (நிலா அல்லது சந்திர தேவன்), கீழ்பெரும்பள்ளம் (கேது தேவன்) ஆகிய 8 நவக்கிரக ஸ்தலங்களும் கஞ்சனூருக்கு அருகாமையிலேயே இருக்கின்றன.

எப்படிப் போவது?

கஞ்சனூர் அக்கினீஸ்வரர் கோயில் (சுக்கிரன் திருத்தலம்) MAP LINK

இது தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவிடைமருதூர் வட்டத்தில் காவிரிக்கு வடக்கே அமைந்துள்ளது. கும்பகோணத்தில் இருந்து 18 கிலோமீட்டர் தூரத்திலும் சூரியனார் கோயிலில் இருந்து 2 கி.மீ.தொலைவிலும் மயிலாடுதுறையில் (மாயவரம்) இருந்து 20 கி.மீ. தொலைவிலும் இத் தலம் அமைந்துள்ளது.கும்பகோணம் மற்றும் மயிலாடுதுறையில் இருந்து பேருந்து வசதி உள்ளது..

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *