கஜா புயலினால் பாதிக்கப்பட்ட திருவாரூர் மாவட்டத்தில் தி.மு.க.தலைவர் நேற்று பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார்.
கஜா புயல் பாதித்த திருவாரூர் மாவட்டத்திற்குட்பட்ட கொரடாச்சேரி, இளங்கரக்குடி, முசிறியம், விடயாபுரம், காவாளக்குடி, கண்கொடுத்தவணிதம், எருக்காட்டூர், கமலாபுரம், வெள்ளாக்குடி, தேவர்கண்டநல்லூர் ஆகிய ஊர்களில் பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாகச் சந்தித்து, ஆறுதல் தெரிவித்தார். அவர்களிடத்தில் ‘உங்களுக்குத் தேவையான உதவிகளைத் திமுக வினர் முடிந்தளவு செய்து தருவார்கள்’ என்கிற உறுதியையும் அளித்துள்ளார்
பாதிக்கப்பட்ட மக்கள் “இன்னும் எங்கள் பகுதிகளுக்கு இழப்பீட்டை மதிப்பீடு செய்து நிவாரணம் வழங்க அதிகாரிகள் ஒருவர் கூட வரவில்லை” என வேதனையோடு தெரிவித்தனர்.
பின்னர், மாவூர், மாங்குடி ஆகிய இடங்களில் பாதிக்கப்பட்ட 6 ஆயிரத்துக்கும் அதிகமான மக்களுக்கு 30 இலட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்களை வழங்கினார்.