நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் திருச்சி மாவட்டங்களிலும் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இன்றும் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை அதே இடத்தில் நீடிக்கின்றது.அதனால், தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுபகுதி 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.