தேர்தல் தோல்வி, ஒற்றை தலைமை: இன்று கூடுகிறது அதிமுக கூட்டம் மக்களவைத் தேர்தலில் ஏற்பட்ட படுதோல்வியை தொடர்ந்து, அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. அதிமுகவுக்கு இரட்டை தலைமை தேவையில்லை, ஒற்றை தலைமை தான் வேண்டும் என்று மதுரை வடக்கு தொகுதி எம்எல்ஏ ராஜன் செல்லப்பா, குன்னம் தொகுதி எம்எல்ஏ ராமச்சந்திரன் உள்ளிட்டவர்கள் குரல் கொடுத்துள்ளனர்.
இதேபோல், அமைச்சர் சி.வி.சண்முகமும், திண்டுக்கல் சீனிவாசன் போன்றவர்கள் பாஜகவுடன் கூட்டணி சேர்ந்ததால்தான் அதிமுக தோல்வி அடைந்தது என்று கூறிவருகின்றனர். இப்படி, பரபரப்பான சூழ்நிலையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள், தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது.
முன்னதாக, மோடி தலைமையிலான புதிய அமைச்சரவையில், அதிமுகவை சேர்ந்த ரவீந்திரநாத் அல்லது வைத்தியலிங்கத்திற்கு அமைச்சர் பதவி கிடைக்கலாம் என்ற பேச்சு இருந்தது. ஆனால், அமைச்சரவையில் இருவருக்கும் இடம் கிடைக்காதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
மேலும் ஓற்றை தலைமை குறித்து சர்ச்சை எழுந்த போதும் ஒன்றைக் கோடி போர் கொண்ட அதிமுக வில் அண்ணன் தம்பி பிரச்சனைகள் இருக்கத்தான் செய்யும் எப்படியாவது கட்சியை உடைத்து விடலாம் என நினைத்தால், அது நிறைவேறாத கனவு. அதனால், தொண்டர்கள் அனைவரும் ஒற்றுமையாய் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் அறிக்கைகளை பின்பற்றி ‘கப்சிப்’ என்று இருக்க வேண்டும் என்று ஜெயக்குமார் அறிவுறித்தியிருந்தார்.