கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அன்று இந்திய பங்குச் சந்தையில் மற்றொருமுறை
வீசிய சூறாவளியில் சுமார் 9200 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது.
இந்திய பங்குச்சந்தையில் முதன்முறையாக பட்டியலிடப்பட்ட இணைய வழி வர்த்தக
நிறுவனம் இன்ஃபிபீம். வெள்ளியன்று மதியம் சுமார் மூன்றரை மணிக்கு பங்குச் சந்தை
வர்த்தகம் முடிந்தபோது, நிறுவனத்தில் முதலீடு செய்திருந்தவர்களுக்கு சுமார் 9,200 கோடி
ரூபாய் இழப்பு ஏற்பட்டது.
2009ஆம் ஆண்டு சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு ஒரே நாளில்
குறைந்ததற்கு பிறகு, தற்போது இன்ஃபிபீம் நிறுவனத்தின் பங்கு மதிப்பு ஒரே நாளில்
அதிரடியாக சரிந்துள்ளது. தோராயமாக 73 சதவிகித சரிவை சந்தித்துள்ளது.
சத்யம் நிறுவனம் பங்குச் சந்தையில் இழப்பை சந்தித்தபோது அதன் பங்கு மதிப்பு ஒரே
நாளில் 83 சதவிகித அளவு குறைந்துபோனது.
சனிக்கிழமையன்று இன்ஃபிபீம் நிறுவனத்தின் ஆண்டு பொதுக்கூட்டம்
நடைபெறவிருந்தது. வியாழனன்று 197 ரூபாயாக இருந்த பங்கு மதிப்பு அடுத்த நாள் 59
ரூபாயாக வீழ்ச்சியடைந்தது.
வியாழனன்று, 13,105 கோடியாக இருந்த நிறுவனத்தின் சந்தை மூலதனம் 24 மணி
நேரத்திற்குள் மட்டுமே 3,900 கோடி ரூபாய் என்ற நிலைக்கு குறைந்துவிட்டது.