ஒரு ரன் வித்தியாசத்தில் பெங்களுர் திரில் வெற்றி

இந்தியன் பிரீமியர் லீக்கில் நேற்று பெங்களூரில் நடைபெற்ற ஆட்டத்தில் பெங்களுர் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த பெங்களுர் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்களை இழந்து 161 ரன்கள் அடித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பார்திவ் பட்டேல் 37 பந்துகளில் 53 ரன்கள் அடித்தார். மொய்தீன் அலி 16 பந்துகளில் 26 ரன்கள் அடித்தார்.

162 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி தொடக்கத்தில் விக்கெட்களை இழந்து தடுமாறியது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி அணியை சரிவில் இருந்து மீட்டார்.48 பந்துகளில் 84 ரன்களை தோனி குவித்த போதிலும் சென்னை அணியால் வெற்றி பெற முடியவில்லை.20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 8 விக்கெட்களை இழந்து 160 ரன்கள் எடுத்தது. ஒரு ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்ற பெங்களுர் தனது 3வது வெற்றியை பதிவு செய்து உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *