இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் தொடர் யாருக்கு என தீர்மானிக்கும் மூன்றாவது ஒரு நாள் போட்டி மெல்போர்ன் நகரில் இன்று நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்திய வீரர் புவனேஷ்குமாரின் சிறப்பான பந்து வீச்சில் அலெக்ஸ் ஹேரி 5 ரன்களிலும், ஆரோன் பின்ச் 14 ரன்களிலும் தொடக்கத்திலேயே வெளியேறினர்.
அதன் பின் இணைந்த ஷேன் மார்ஷ் மற்றும் கவாஜா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.கவாஜா 34 ரன்களில் சஹால் பந்து வீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார். அதே ஓவரில் ஷேன் மார்ஷ் 39 ரன்களில் டோனியால் ஸ்டம்பிங் செய்யப்பட்டார்.
அதன் பின் ஆஸ்திரேலிய வீரர்கள் குறிப்பிட தகுந்த பேட்டிங் ஆட்டதிறனை வெளிபடுத்தவில்லை. ஹேன்ட்காம்ப் மட்டும் ஓரளவு தாக்குபிடித்து 63 பந்துகளில் 58 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலிய அணி 48.4 ஓவர்களில் 230 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
சிறப்பாக பந்து வீசிய இந்திய வீரர் சஹால் 10 ஓவர்களில் 42 ரன்கள் விட்டுகொடுத்து 6 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார்.புவனேஷ் குமார் மற்றும் முஹமது சமி தலா இரண்டு விக்கெட்களை கைப்பற்றினர்.
அடுத்து களம் இறங்கிய இந்திய அணி ஆஸ்திரேலிய வீரர்களின் சிறப்பான பந்து வீச்சுக்கு ஈடு கொடுக்க முடியாமல் தொடக்கத்தில் தடுமாறியது. இந்திய வீரர் ரோஹித் ஷர்மா 17 பந்துகளில் 9 ரன்கள் எடுத்து சிடில் பந்து வீச்சில் ஷேன் மார்ஷ்யிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். மற்றொரு துவக்க வீரர்ட் தவான் 46 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து ஸ்டோனிஸ் பந்து வீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
அதன் பின் இணைந்த விராட் கோலி மற்றும் தோனி ஜோடி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 62 பந்துகளில் 46 ரன்கள் அடித்த கோலி ரிச்சர்ட்சன் வீசிய சிறப்பான பந்தில் எட்ஜ் ஆகி விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரியிடம் கேட்ச் ஆனார்.
இன்றைய போட்டியில் தோனி மற்றும் கோலிக்கு இரண்டு கேட்ச் மற்றும் ஒரு ரன் அவுட் ஐ தவறவிட்டனர் ஆஸ்திரேலிய வீரர்கள்.அதன் பின் சுதாரித்து கொண்டு விளையாடிய தோனி 70 வது அரை சதத்தை பதிவு செய்தார். அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய கெதர் ஜாதவும் அரை சதம் அடித்தார்.
இந்திய அணி 49.2 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 234 ரன்கள் எடுத்து வெற்றி இலக்கை அடைந்தது. தோனி 117 பந்துகளில் 6 பவுண்டரிகள் உடன் 87 ரன்கள் எடுத்தும், கேதர் ஜாதவ் 57 பந்துகளில் 7 பவுண்டரிகள் உடன் 61 ரன்கள் எடுத்தும் கடைசி வரை களத்தில் நின்றனர். இந்திய அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் ரிச்சர்ட்சன், சி்டில், ஸ்டோனிஸ் தலா ஒரு விக்கெட் ஐ கைப்பற்றினர்.
ஆட்ட நாயகன் விருதை சாஹலும், தொடர் ஆட்ட நாயகன் விருதை தோனியும் தட்டி சென்றனர்.