இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதிய இரண்டாவது டி20 போட்டியானது பெங்களூரில் நேற்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்களை இழந்து 190 ரன்கள் எடுத்தது.
இந்திய அணியில் அதிகபட்சமாக கேப்டன் விராட் கோலி 38 பந்துகளில் 72 ரன்களும், ராகுல் 27 பந்துகளில் 46 ரன்களும், தோனி 23 பந்துகளில் 40 ரன்களும் குவித்தனர்.
அடுத்து 191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 19.4 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 194 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது. அந்த அணியின் மேக்ஸ்வெல் 9 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகள் உதவியுடன் 55 பந்துகளில் 113 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் நின்று அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.
அர்சி ஷார்ட் 28 பந்துகளில் 40 ரன்கள் குவித்தார். இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரை ஆஸ்திரேலிய அணி கைபற்றி உள்ளது. சதம் அடித்த ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.