ஒன்ப்ளஸ் 7-ன் விற்பனை

கடந்த மாதம் ஒன்ப்ளஸ் 7 Pro-வுடன் அறிமுகமான ஸ்மார்ட்போன் தான் இந்த ஒன்ப்ளஸ் 7. இந்த ஒன்ப்ளஸ் 7 Pro ஸ்மார்ட்போனின் விற்பனை, இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமான அந்த வாரமே துவங்கிய நிலையில், ஒன்ப்ளஸ் 7-ன் விற்பனை ஜூன் மாதம் 4-ஆம் தேதியான இன்று துவங்கவுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை அமேசான் மற்றும் ஒன்ப்ளஸ் தளங்களில் மதியம் 12 மணிக்கு துவங்கவுள்ளது. எஸ் பி ஐ கிரடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்கு 2,000 ரூபாய் உடனடி தள்ளுபடி பெறப்போகும் இந்த ஸ்மார்ட்போனிற்கு ஜியோ நிறுவனம் 9,300 ரூபாய் வரியயிலான் சலுகைகளை வழங்கியுள்ளது.

ஒன்ப்ளஸ் 7: விலை என்ன, எங்கு பெறலாம்?

6GB RAM + 128GB சேமிப்பு மற்றும் 8GB RAM + 256GB சேமிப்பு அளவு என இரண்டு வகைகளில் மட்டுமே வெளியாகியுள்ளது இந்த ஒன்ப்ளஸ் 7 ஸ்மார்ட்போன். இதில் 6GB RAM + 128GB சேமிப்பு அளவு கொண்ட ஒன்ப்ளஸ் 7-ன் விலை ரூபாய் 32,999 . அதே நேரம் 8GB RAM + 256GB சேமிப்பு அளவுகொண்ட ஒன்ப்ளஸ் 7-ன் விலை ரூபாய் 37,999 என அறிவித்துள்ளது. 6GB RAM + 128GB சேமிப்பு வகை கொண்ட ஸ்மார்ட்போன் சாம்பல் (Mirror Grey) வண்ணத்திலும் 8GB RAM + 256GB சேமிப்பு வகை கொண்ட ஸ்மார்ட்போன் சாம்பல் (Mirror Grey) மற்றும் சிவப்பு ஆகிய இரண்டு வண்ணங்களில் வெளியாகும் என அறிவித்துள்ளது ஒன்ப்ளஸ் நிறுவனம்.
இரண்டு நானோ சிம் வசதி, அண்ட்ராய்ட் 9.0 பை(Android 9.0 Pie) அமைப்பைக்கொண்ட இந்த ஸ்மார்போன் ஆக்சிஜன் ஓ எஸ்(OxygenOS) உடன் செயல்படும். 8GB வரையிலான RAM கொண்ட இந்த ஸ்மார்ட்போன் ஸ்னேப்ட்ராகன் 855 எஸ் ஓ சி ப்ராசஸரை கொண்டுள்ளது.

6.41-இன்ச் FHD+ திரையை கொண்டிருக்கும் இந்த ஒன்ப்ளஸ் 7-னில் 90Hz திரை புதுப்பிப்பு விகிதம்(refresh rate) ஆகிய திரை அம்சங்களை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் திரை பற்றி மேலும் கூறுகையில் 19.5:9 என்ற திரை விகிதத்தையும், 402ppi பிக்சல் டென்சிடியையும் கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் கொரில்லா கிளாஸ் 6 பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் ஜென் மோட், மற்றும் ஸ்கிரீன் ரெக்கார்டிங் வசதியும் உள்ளது.

இரண்டு பின்புற கேமராக்களை மட்டுமே கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். 48 மேகாபிக்சல் மற்றும் 5 மேகாபிக்சல் என்ற அளவுகளை கொண்டுள்ளது இந்த இரண்டு கேமராக்கள். இந்த ஸ்மார்ட்போனில் 16 மேகாபிக்சல் அளவிலான செல்பி கேமரா இருக்கிறது. இந்த செல்பி கேமரா, முன்பகுதியில் ஒரு சிறய நாட்ச் கொடுக்கப்பட்டு பொருத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஒன்ப்ளஸ் 7-வில் 3700mAh பேட்டரி அளவு கொண்ட பேட்டரி, டைப்-C சார்ஜ் போர்ட், அதிவேக வார்ப் சார்ஜர் 20(5V/ 4A) கொண்டு வெளியாகும் என அறிவித்துள்ளது. 157.7×74.8×8.2mm போன்ற அளவுகளை கொண்ட இந்த ஸ்மார்ட்போன் 182 கிராம் எடை கொண்டுள்ளது.

இன்னும் பல வசதிகளை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன், 4G VoLTE மற்றும் வை-பை வசதி கொண்டும் மற்றும் ப்ளூடூத் v5.0 கொண்டுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *