12-வது ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 23-ம் தேதி தொடங்குகிறது. முதல் ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகின்றன.இந்த முறை மக்களவைத் தேர்தல் நடப்பதால், முன்கூட்டியே ஐபிஎல் போட்டிகள் தொடங்கியுள்ளன. தேர்தலையொட்டி வெளிநாட்டில் போட்டிகள் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அனைத்து போட்டிகளும் உள்நாட்டில் நடத்தப்படுகிறது. டிஎன்சிஏ மூலம் கவுண்டர் டிக்கெட் விற்பனை மார்ச் 16 ஆம் தேதி 11.30 மணிக்கு தொடங்கும். மீதமுள்ள சிஎஸ்கே உள்ளூர் ஆட்டங்கள் டிக்கெட் விற்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். சி, டி மற்றும் இ கீழ்பகுதி-ரூ.1300, சி மற்றும் இ-மேல் பகுதி ரூ.2500, விருந்தினர் டிக்கெட்டுகள்-ரூ.5000, ரூ. 6,500 விலையில் விற்பனையாக உள்ளது.
ஐபிஎல் போட்டிகளுக்கான டிக்கெட்கள் விற்பனை?
