“ஐசிசி-யிடம் பர்மிஷன் வாங்கியாச்சு”

உலகக் கோப்பையில் இந்திய கிரிகெட் அணி தென்னாப்பிரிக்காவை எதிர்த்துத் தனது முதல் போட்டியை விளையாடியது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் மாஸ் பெர்ஃபார்மன்ஸ் மட்டும் பேசு பொருளாக மாறவில்லை. விக்கெட் கீப்பர் தோனியின் கீப்பிங் கிளவுசும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

தென்னாப்பிரிக்கப் போட்டியில் தோனி அணிந்திருந்த கீப்பிங் கிளவுஸில் ராணுவத்தின் முத்திரைப் போன்ற ஒன்று இருந்தது. இதைப் பல கிரிக்கெட் ரசிகர்கள் கண்டு, ட்விட்டரில் விவாதிக்கத் தொடங்கிவிட்டனர். பலரும் தோனியின் இந்த செயலுக்குப் பாராட்டு தெரிவித்தனர்.

ஆனால் சர்வதேச கிரிக்கெட் அமைப்பான ஐசிசி, தோனியின் இந்த செயலை ரசிக்கவில்லை. கிளவுஸில் இருக்கும் அந்த முத்திரை நீக்கப்பட வேண்டும் என்றும் கூறியுது.
பிசிசிஐ அமைப்பின் வினோத் ராய் தோனி  கிளவுஸில் வைத்திருக்கும் முத்திரை ராணுவத்தினுடையது அல்ல மேலும் அந்த முத்திரையை பயன்படுத்த அவர் சார்பில் பிசிசிஐ  முறைப்படி ஐசிசி இடம் அனுமதி வாங்கிவிட்டது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *