மெர்சல், தெறி படத்தைத் தொடர்ந்து அட்லி தற்போது விஜய்யை வைத்து ‘தளபதி 63′ படத்தை இயக்கி வருகிறார். இதில் நயன்தாரா கதாநாயகியாக நடித்து வருகிறார். இவர்களுடன் கதிர், ஜாக்கி ஷெராப், இந்துஜா, யோகி பாபு, விவேக், டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.
பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு இந்த திரைப்படம் உருவாகி வருகிறது. விஜய் இதில் கால்பந்தாட்ட பயிற்சியாளர் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
சென்னை அதன் சுற்றுவட்டார பகுதியில் இதன் படப்பிடிப்பு பரபரப்பாக நடந்து வருகிறது. விரைவில் படப்பிடிப்பை முடித்துவிட்டு இந்த ஆண்டு தீபாவளிக்கு படத்தை திரையிடப் படக்குழு முடிவு செய்திருக்கிறது.
ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசை அமைத்து வருகிறார். இந்நிலையில், இப்படத்தின் பாடல்களுக்கு இசை அமைக்கும் வேலையை துவங்கி விட்டதாக ஏ.ஆர்.ரகுமான் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருக்கிறார். இதில் அட்லி அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்றையும் அவர் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த செய்தி விஜய் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது