வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கிய இடம் வகிப்பவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான மிஸ்டர் லோக்கல் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும். பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் அடுத்த படத்தில் பிசியாக நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.
திரைப்படங்களில் நடிப்பதோடு மட்டும் இல்லாமல் வளரும் படைப்பாளிகளை ஊக்குவிக்கும் விதத்தில் பல்வேறு திரைப்படங்களை தயாரித்து வருகிறார். சிவகார்த்திகேயன் புரெடக்ஷ்ன் தொடங்கி இரண்டு படங்களை தயாரித்து இருக்கிறார். இவர் தயாரிப்பில் வெளியான கனா திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து நெஞ்சமுண்டு நேர்மை உண்டு படத்தை தயாரித்து இருக்கிறார்.
இந்நிலையில் இன்று சிவகார்த்திகேயனின் தந்தையார் பிறந்தநாளை முன்னிட்டு மூன்றாவதாக படம் ஒன்றை தயாரிப்பதாக அறிவித்திருக்கிறார். அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கும் இந்த திரைப்படத்திற்கு ‘வாழ்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சிவகார்த்திகேயன் இன்று வெளியிட்டிருக்கிறார்.