எம்எல்ஏ பதவி  பறிப்பு

கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டம் ஆழிக்கோடு பகுதியில் இப்பகுதியில் போட்டியிட்டவர் கே.எம்.ஷாஜி இவர் முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்தவர். இவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட நிகேஷ் குமாரை சுமார் 2 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். நிகேஷ்குமார் பல்வேறு குற்றச்சாட்டுகளை வழக்குகளாகப் பதிவு செய்திருந்தார். அவற்றின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்தது. அதில் முக்கியக் குற்றச்சாட்டு முஸ்லிம் மதத்தவர்கள் தனக்கே வாக்களிக்க வேண்டும் எனவும், பிற மதங்களுக்கு வாக்களிக்கக் கூடாது எனவும், கூறியதாக அனைத்து ஆதாரங்களையும் நிகேஷ் உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார். இதன் இறுதி தீர்ப்பில் அவருக்கு அபாரதம் ரூபாய் 50,000 செலுத்தவும், இதனுடன் அவரது எம்எல்ஏ பதவியைப் பறிக்கவும் உத்தரவிட்டார்.

இதனால் கே.எம்.ஷாஜி இனி தேர்தலில் ஆறு ஆண்டுகள் போட்டியிட முடியாது.கே.எம்.ஷாஜி மேல் முறையீடு செய்யப் போவதாகத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *